மனிதன் தன்னைத் தானே எல்லாவற்றையும் நிரப்பிக் கொண்டு திரிகிறான் ... - OSHO
மனிதன் தன்னைத் தானே எல்லாவற்றையும் நிரப்பிக் கொண்டு திரிகிறான் ...
இதுதான் அவன் ஆன்மிகத் தேடலுக்கு
தடையாக இருக்கிறது ...
மனிதன் ஒரு வெற்று மூங்கிலைப்
போல் இருக்க வேண்டும் ...
அப்பொழுதுதான் உயிர்த் தன்மை உங்கள் உள்ளே பாய்ந்து செல்லும் ...
மனிதன் ஒரு பாறையைப் போல்
இருக்கக் கூடாது ...
நீரை உறிஞ்சும் பஞ்சு போல் மனிதன்
இருக்க வேண்டும் ...
அப்போதுதான் இந்த பிரபஞ்ச உயிர்த்
தன்மை உங்கள் மூலமாக பாய்ந்து செல்லும் ...
உங்கள் உள்ளே யாரும் இருக்கக்
கூடாது ...
அந்த ஒன்றும் அற்ற நிலையே
பேரானந்தத்தின் உச்ச நிலையாகும் ...
உங்களுக்காகத்தான் இந்த பூமியும்
ஆகாயமும் உள்ளன ...
இந்த பூமி உங்களின் உடலைக்
கொடுத்தது ...
இந்த ஆகாயம் உங்கள் மூச்சைக்
கொடுத்தது ...
நீங்கள் உயிர் வாழ்வதற்கு இந்த
இரண்டு முழுமைகள்தான் காரணம் ...
இந்த முழுமைதான் உங்களை
வளர்க்கிறது ...
அதுதான் உங்கள் மீது அன்பு
செலுத்துகிறது ...
நீங்கள் தனியான ஒரு ஆள்
இல்லை ...
ஆனால் நீங்கள்தான் உங்களைத்
தனிமைப்படுத்திக் கொள்கிறீர்கள் ...
அதுதான் உங்களிடம் ஒரு பயத்தை
ஏற்படுத்துகிறது ...
அதுதான் ஒரு பாதுகாப்பின்மையை
உங்கள் மனதில் தோற்றுவிக்கிறது ...
நீங்கள் உங்கள் நோக்கத்தின்படி
வாழ்க்கையை நடத்துவதால் ...
எப்பொழுதும் ஒரு இறுக்கத்தில்
இருக்கின்றீர்கள் ...
ஆகவே முதலில் மென்மையாகவும்
மிதந்து செல்லும் தன்மை ...
உடையவராகவும் மாறுங்கள் ...
இயற்கையோடு போராடாதீர்கள் ...
அதற்கு மாறாக அதனுடன் கலந்து
உறவாடுங்கள் ...
புல் தானாகவே வளர்கிறது ...
ஓஷோ ...
புல் தானாகவே வளர்கிறது ...
Comments
Post a Comment