நடனமாடுதல் - OSHO
🦋நடனமாடுதல்🦋
நீ தியானத்தன்மையோடு ஆடும்போது உன்னுடைய நடனம் ஒரு புதிய தன்மையை பெற்று விடுகிறது.
ஏதோ ஒரு தெய்வீகம் அதில் வந்து விடுகிறது.
ஏனெனில் நீ தியானத்தன்மையோடு ஆடும்போது அங்கே அகம்பாவம் இருப்பதில்லை, நடனமாடுபவரும் இருப்பதில்லை. இதுதான் தியானத்தின் கலை.
அகம்பாவமும் காணாமல் போய், மனமும் இல்லாமல் போகும் இந்த நிலையைத் தான் நான்
தெய்வீக இயல்பு என்று கூறுகிறேன்.
நடனமாடுபவர் மௌனமாக இருக்கும்போது ஆடல் தொடர்ந்தால் அங்கே நடனமாடுபவர் கரைந்து விடுகிறார்.
உனது மனமும் உடலும் உயிரும் ஒரே லயத்தில் இருக்கிறதா என்று அறிய ஆடல் ஒரு பரிசோதனை.
நடனமாடுபவர்தான் நடனமே.
எனவே ஆடுபவர் ஆடலில் இருந்து வேறுபட்டவரல்ல.
தியானம் என்று வரும்போது ஆட்டத்திற்கு இணையாக எதையும் சொல்ல முடியாது.
நடனம் ஒரு மிக அழகான லயத்தோடு கூடிய செயல்பாடாகும்.
ஆடுபவரின் முகத்தில் ஒரு புதுவித ஜொலிப்பை நீ பார்க்கலாம்.
அதுதான் ரசவாதம்.
🦋🦋🦋
📕தி புக் ஆப் சீக்ரட்ஸ்
Comments
Post a Comment