மனதின் மொத்த அபத்தைத்தையும் நீங்கள் ஒரு தடவை உணர்ந்து கொண்டுவிட்டால்...- OSHO
மனதின் மொத்த அபத்தைத்தையும் நீங்கள் ஒரு தடவை உணர்ந்து கொண்டுவிட்டால்.....மனம் உங்களை ஆசையுட் செலுத்துகிறது.
ஆசை உங்களை ஏமாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது.
மனம் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு வெற்றியும் ஒரு தோல்வியாக ஆகிறது.
மனம் உங்களை அழகை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஒவ்வோர் அழகும் ஓர் அசிங்கமென்று தெரிய வருகிறது.
ஆசை உங்களை மேலே மேலே இட்டுச் செல்கிறது. தன் எந்த ஒரு வாக்குறுதியையும் அது ஒருபோதும் நிறைவேற்றுவது இல்லை.
அது உங்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்குகிறது....இல்லை, அது ஒரு வாக்குறுதியைக்கூட அது நிறைவேற்றுவதில்லை.
அது உங்களுக்கு சந்தேகத்தையே தருகிறது. சந்தேகம் இதயத்தை ஒரு புழுவாக துளைத்தெடுக்கிறது. அது ஒரு நஞ்சு.
அது உங்களை விசுவாசம் கொள்ள அனுமதிக்காது. விசுவாசம் இல்லாவிட்டால் வளர்ச்சி என்பது இல்லை.
இந்த மொத்த விஷயத்தையும் நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் ஒரு சீடராக ஆக முடியும்.
மனமே துன்பத்தின் காரணகர்த்தா, அவலங்களின் ஆணிவேர் மனமே என்னும் பாடத்தை வாழ்ந்து கற்றுக் கொணடுவிட்டவரே சீடர்.
"வேறொருவர்தான் என் துயரங்களுக்கு காரணம் நானல்ல" என்றே உங்கள் மனம் எப்போதும் கூறுகிறது. இது ஒரு தந்திரம், இது மனதின் ஒரு தந்திரம், சூழ்ச்சி வலை என்பதை அறிந்து கொண்டுவிட்டவரே சீடர்.
"வேறொருவர்தான் பொறுப்பாளி நானல்ல" என்றே எப்போதும் மனம் கூறுகிறது. இப்படித்தான் அது தன்னைக் காப்பாற்றி, பாதுகாத்து தப்பித்துக் கொள்கிறது. இது தவறு, மனதின் சூழ்ச்சியே இது என்பதை புரிந்து கொண்டுவிட்டவரே சீடர்.
--ஓஷோ--
Comments
Post a Comment