Google

தியானத்துக்கு இரண்டு விசயங்கள் நினைவில் கொள்ளவேண்டும். - OSHO



*_தியானத்தை எப்படி செய்யறதுனு ஓஷோ மிக மிக எளிமையா சொல்லி இருக்கிறார்._*

*♨தியானம்♨*

 தியானத்துக்கு இரண்டு விசயங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

ஒன்று...

 உங்களது உடம்பைத் தளர்ச்சியாய் விட்டுவிட வேண்டும்.

இளைப்பாறலாய் விட்டு விட வேண்டும்.

ஓசையின்றி அமர வேண்டும்.

உடம்பை முழுவதும் தளர்த்திக் கொண்டு, முதுகெலும்பை நேராக வைத்து, ஓசையின்றி அமைதியாய் உட்காரவேண்டும்.

உடலின் அனைத்து விதமான அசைவுகளையும் நிறுத்திவிட வேண்டும்.

மெதுவாகவும், ஆழமாகவும், எந்தவித கிளர்ச்சியும் இல்லாமல் நீங்கள் சுவாசியுங்கள்.

உங்கள் சுவாசத்தை நீங்கள் பேசாமல் அமைதியாய் கவனியுங்கள்.

கண்களை அழகாய் மூடிக்கொண்டு கேளுங்கள்.

கண்ணிமைகள் மிருதுவாய் கண்களை மூடி விடட்டும்.

கண்களில் எந்தவித அழுத்தமும் இல்லாமல், இமைகளை இறக்கி கண்களை மூடுங்கள்.

பின்பு தலை மற்றும் முகம் ஆகியவற்றின் தசைகள் அனைத்தையும் தளர விடுங்கள். சிறு குழந்தையின் முகத்தைப் போன்று தளர்வாய் இருக்கட்டும்.

அனைத்தையும் நீங்கள் பூரணமாய் இளைப்பாறலுக்குள் விட்ட கணத்தில், உங்களுடைய சுவாசம் தானாய் இறுக்கம் தளரும்.

சுயமாய் அது அமைதியாகும்.

இரண்டாவது...

சுற்றிவர இருக்கும் பகுதிகளிலிருந்து வரும் அத்தனை ஓசைகளையும் அமைதியாக கேளுங்கள்.

ஆனால் கேட்கும் எந்த சத்தத்திற்கும் எதிர் வாதம்/எதிர் இயக்கம் ( Reaction ) அடைய வேண்டும்.

அந்த சப்தத்திற்கு எந்தவிதமான சிந்தனையும் தரவேண்டாம்.

வெறும் சாட்சியாளனாய் இருந்து சத்தங்களை கேளுங்கள்

பறவையின் குரலைக் கேளுங்கள், மரத்தை அடித்துச் செல்லும் காற்றோசையை கேளுங்கள், குழந்தையின் அழுகுரலைக் கேளுங்கள், மேல் கீழாக நகரும் சுவாச சலனத்தையும், இதயத்துடிப்பையும் கேளுங்கள்.

பத்து நிமிடம் கேளுங்கள். வேறொன்றுமே செய்து விடக் கூடாது.

கேளுங்கள்... படிப்படியாய், உங்களுக்குள் சாந்தத்தின், அமைதியின் ரீங்காரம் துவங்கும்.

புத்தி அமைதியாகிறது.

 கேளுங்கள் புத்தி சாந்தமாகிக் கொண்டிருக்கிறது...

புத்தி சாந்தமாகிவிட்டது, புத்தி முற்றிலும் சாந்தமாகி விட்டது.

ஆழ்ந்த அமைதி உள்ளே உள்ளது. ஆழ்ந்த சாந்தம் உள்ளே உலவுகிறது, அதைக் கேளுங்கள்.

புத்தி சாந்தமாகிக் கொண்டிருக்கிறது.... கேட்டுக் கொண்டேயிருங்கள்... புத்தி ஓசையே அற்ற அமைதிக்குள் நுழைகிறது.

~~ ஓஷோ ~~

Comments