Google

நான் என்பதை விட வேண்டியதில்லை - OSHO



நான் என்பதை விட வேண்டியதில்லை
 ஏனெனில் இல்லாததை எப்படி விட முடியும்?

நான் என்பது உற்று நோக்கப்பட வேண்டும்
 புரிந்து கொள்ளப்பட வேண்டும்

விளக்கை எடுத்துக் கொண்டு இருட்டை தேடப் புறப்படுவது போல,, இருட்டு மறைந்து விடும்.

இருட்டை வெளியேற்ற இயலாது.
ஏனெனில் அது உண்மையில் இல்லை.

நீ வெறுமனே வெளிச்சத்தை கொண்டு வந்தால் போதும்,,, இருள் மறைந்து விடும்.

இது போன்றதே உன் எண்ணங்களும்
 அவற்றுடன் சண்டை போடாதே

 எண்ணங்களிலிருந்து விடுதலை வேண்டும்
 என்கிற முயற்சியும் ஒரு எண்ணத்திலிருந்து தான் வருகிறது.

எண்ணங்களை புரிந்து கொள்,,, உற்று நோக்கு உணர்ந்து கொள்.,,, பின் அவை தாமாகவே அமைதியடைகின்றன.

சாட்சியாயிருத்தல் கடைசியில் சூன்யத்தை கொண்டு வருகிறது.

எங்கு சூன்யம் இருக்கிறதோ அங்கு
 அனைத்தும் இருக்கிறது.

ஓஷோ,,,,

Comments