Google

சிந்தித்தல் என்றால் தீர்மானித்தல் என்று பொருள் ... - OSHO



சிந்தித்தல் என்றால் தீர்மானித்தல்
என்று பொருள் ...

நீங்கள் ஏதாவது ஒரு பொருளைப்
பார்த்தவுடன் ...

அதைப் பற்றி ஒரு தீர்மானத்திற்கு
வருகிறீர்கள் ...

ஒரு மலரைப் பற்றி ,
நீங்கள் அது அழகாக இருக்கிறது ...

அல்லது அழகாக இல்லை என்று
தீர்ப்பளிக்கிறீர்கள் ...

சிந்தனை என்பது தீர்ப்பளித்தல் அல்லது
மதிப்பிடுதல் ...

மதிப்பீடு செய்யாமல் உங்களால்
சிந்திக்க முடியாது ...

ஒரு பொருளை மதிப்பீடு செய்து அதற்கு
ஒரு அடையாளத்தைக் கொடுத்து விடுகிறீர்கள் ...

ஒரு பொருளைப் பற்றி எந்த தீர்ப்பையும்
அளிக்கப் போவதில்லை எனும்போது ...

அங்கு சிந்தனை சாத்தியப் படாது ...

அதன் பின்னர் நீங்கள் வெறுமனே
விழிப்புணர்வுடன் மட்டுமே இருக்க முடியும் ....

உங்களால் எதுவும் கூற முடியாது
வார்த்தைகளை உபயோகிக்க முடியாது ...

ஏனெனில் ஒவ்வொரு வார்த்தையும்
ஒரு மதிப்பீட்டை வைத்திருக்கிறது ....

அப்போது நீங்கள் மொழிகளைப் பயன்
படுத்த முடியாது ...

நீங்கள் எந்த சிந்தனையும் இல்லாமல்
அங்கு இருந்தால் ...

ஏதாவது ஒன்றை வெறுமனே பார்த்துக்
கொண்டிருந்தால் ....

அதுதான் சாட்சி பாவனை அல்லது
அமைதியான விழிப்புணர்வு ...

ஓஷோ ...
விழிப்புணர்வு தொடரும் ...

Comments