"நீ இயற்கையின் ஒரு அங்கம்" - OSHO
❤ "நீ இயற்கையின் ஒரு அங்கம்"
"மிகப்பெரிய பிரம்மாண்டத்தின் மிகச்சிறிய துளி"
"உய்விருப்பு அல்லது இயற்கைக்கு முன் நீ எதுவுமேயில்லை"
"இயற்கையோடு போராடுதல் உனக்குச் சாத்தியமேயில்லை."
இப்படியெல்லாம் சிந்தித்து வியப்படைவது கூட மனதின் செயலே.
இத்தகைய வியப்புகூட கண்டுபிடிக்கக் கடினமான ஒரு மெல்லிய அகங்காரத்தை தன்னகத்தே சூழ்கொண்டுள்ளது.
ஏனெனில் மனம் கரைந்து விட்ட நிலையில்...
'நீ இயற்கையின் ஒரு அங்கம்"
என நினைத்துக் கொண்டிருப்பதற்கெல்லாம் அங்கு யாரும் இல்லை.
நீ முழுமையாய் கரைந்து காணாமல் போகிறாய்.
ஒரு சிறிய அங்கமாகவெல்லாம் இல்லை.
நீயே முழுமையாகிறாய்.
உன்னைத்தவிர அங்கு பிறிதொன்று ஏதுமில்லை.
அந்நிலையில் நீ இல்லை. இல்லவேயில்லை.
வார்த்தைகளுக்கு அங்கு வேலையேயில்லை
அந்நிலையை விவரிக்க முயற்சிக்கும் விநாடியில் நீ மனதிற்குள் அதாவது அகங்காரத்தில் விழுந்து விடுகிறாய்.
மனம் என்பதே அகங்காரம்தான்.
தியானம் செய்
அகங்காரம் கரையும் ❤
🌹 ஓஷோ 🌹
-OSHO_Tamil
Comments
Post a Comment