ஒரு புத்த தத்துவஞானி ஒரு அரசனின் அவைக்குக் கொண்டு வரப்பட்டார். - OSHO
ஒரு புத்த தத்துவஞானி ஒரு அரசனின் அவைக்குக் கொண்டு வரப்பட்டார். மக்கள் அவரைத் தாங்கள் கேள்விப்பட்டிருந்த தர்க்கவாதிகளிலே தலைசிறந்த ஒருவர் என்று கருதினார்கள். அவர் எல்லாமே மாயை என்ற கருத்தை முன்வைத்தார். எல்லாமே கனவுகளால் செய்யப்பட்டிருந்தன என்றார்;.
ஆனால் அரசன் ஒரு செயல்பாட்டில் நம்பிக்கை உள்ள நடைமுறை மனிதன்.
அவன், “கொஞ்சம் பொறுங்கள். நமது மக்களை அவர்கள் வீட்டிற்குள்ளே சென்று கதவை மூடிக்கொள்ளச் சொல்லுங்கள். கடைகளை மூடிவிடுங்கள். நமது மதம் பிடித்த யானை வெளியே வரப்போகிறது என்று அறிவியுங்கள்” என்றான்.
இந்த புத்த தத்துவஞானி சாலையில் நின்று கொண்டிருக்க விடப்பட்டார். அவர், அழுது கண்ணீர் விட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு, “என்னைக் காப்பாற்றுங்கள்! எதுவுமே மாயை அல்ல. குறைந்தபட்சம் இந்த யானை மாயை அல்ல” என்று கூறினார். யானை உண்மையாகவே மதம் பிடித்ததாக இருந்தது.
அவரது நிலைமையைப் பார்த்து, யானை அவரைத் தாக்குவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டது. தத்துவஞானி மீண்டும் அவைக்கு அறைத்து வரப்பட்டார்.
அரசன் கேட்டான்: “இப்போது உங்கள் தத்துவத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?”
“எல்லாமே மாயை! ஏன்றார் அவர்,
அப்போது யானை?” என்றான் அரசன்,
“யானையும் மாயை, அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த தத்துவ மேதையும் மாயை, அவரைக் காப்பாற்றிய அரசனும் மாயை ---- எல்லாமே மாயை. ஆனால் தயவுசெய்து என்னை மீண்டும அங்கே வெளியில் விடாதீர்கள். ஏனெனில் அது ஒரு தத்துவம் மட்டுமே. நான் வாதம் புரியத் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு மதம் பிடித்த யானையுடன் வாதம் செய்ய முடியாது. உங்களிடம் யாராவது தத்துவ மேதைகள் இருந்தால், கொண்டு வாருங்கள். நான் எல்லாமே மாயை என்று நிரூபிக்கிறேன்.” என்றார் மேதை.
இந்த தத்துவ மேதைகள் கூறியதில் ஒரு சிறிய உண்மை உள்ளது. ஆனால் அவர்கள் அதை நிரூபிக்க முயன்று கொண்டிருந்தார்கள். அங்கேதான் அவர்கள் தவறு செய்தார்கள்.
அன்பை நிரூபிக்க முடியாது.
அது அனுபவிக்கப்பட மட்டுமே முடியும்.
மேலும் அன்பில், வெளி காலம் இவற்றை உள்ளடிக்கிய எல்லாமே கனவுகளால் செய்யப்பட்டது போலத் தோன்றுகிறது. அது ஒரு வாதம் அல்ல, ஒரு தத்துவம் அல்ல.
நீங்கள் ஒரு நபரின் அருகே, உடல்கள் தொட்டுக் கொண்டிருக்க அமரலாம்: அதே நேரத்தில், நீங்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் ஒருவருக்கொருவர் விலகி இருக்கலாம்.
அதேபோல, நீங்கள் நூற்றுக்கணக்கான மைல்கள்ஒருவரை விட்டு ஒருவர் விலகி இருக்கலாம் --- எனினும் அன்பு உள்ளங்கள் இருவரையும் மிக நெருக்கத்தில் கொண்டுவரும், இருவரும் ஒன்றாக உருகிக் கூடலாம்.
-- ஓஷோ --
(ஞானத்தின் ரசவாதம்)
Comments
Post a Comment