சமீப காலமாக மனதைக் கடந்து போய் - OSHO
பிரிய ஓஷோ, சமீப காலமாக மனதைக் கடந்து போய், அதனினும் அதிக அனுபவம் பெறும் ஏக்கம் எனக்குள் வளர்வதாக நான் உணருகிறேன்.அது ஒரு நீண்ட செயல்முறை போலத் தோன்றுகிறது. அது, அதிக காலம் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டுமா?
மனதைக் கடந்து செல்லும் ஏக்கம் மட்டுமே இருப்பவற்றுள் மதிப்புமிக்க ஏக்கமாகும். அது தவிர மனிதன் விரும்பும், எதிர்பார்க்கும், அனைத்தும் முற்றிலும் அர்த்தமற்றவை.
வெற்றியும்,தோல்வியும்,அனைத்துவித வழிகளுமே உன்னை எங்குமே அழைத்துச் செல்லாது.
தோல்வியில் நீ வலி உணர்வது மட்டுமல்ல-வலி, வேதனை மற்றும் தோற்ற உணர்வு, ஆனால் ஜெயித்தவர் எவரோ அவரும் அதே வலியை வேறு வகையில் உணர்ந்திருப்பார்.ஒருவேளை தோற்றவர்களை விட அதிக ஆழமாய் உணர்ந்திருக்கலாம்.
ஏனெனில் அவர்களுக்கு எது வேண்டுமோ,அதில்,அவர்கள் ஜெயித்திருந்தாலும், அவர்களது உள்ளிருப்பு நிலை மட்டும்,இருளாகவும்,வெற்றிடமாகவுமே தொடர்ந்து இருக்கின்றது.
அனைத்து ஏக்கங்களும் மனதிலிருந்து எழுபவை.பிறகு எப்படி அந்த மனம் தன்னைக் கடந்து செல்ல ஏங்கும்? விருப்பப்படும்?
மற்ற ஆசைகளைப் போலவோ,வேறு இலட்சியங்களைப் போலவோ,இந்த மனதைக் கடந்து செல்லும் ஏக்கம் புரிந்து கொள்ளப்படக் கூடாது.உண்மையில் அதை ஒரு ஏக்கம் என்று சொல்வதே சரியில்லை.
அது ஆசையை விட மேலான புரிந்துகொள்ளும் முயற்சியாகும்.மனதின் வலிகளையும்,வேதனைகளையும் உணர்ந்து கொள்வதன் மூலம் ஒருவர் தன் மனதைக் கடந்து செல்வது மிக நல்லது என்று புரிந்து கொள்வதே ஆகும்.
அது ஒன்றும் வெகு தொலைவில் உள்ள எதிர்கால லட்சியம் அல்ல;ஆனால் இப்போதே இங்கேயே நடக்க அனுமதி தேவைப்படும் ஒன்றாகும்.
--ஓஷோ--
Comments
Post a Comment