நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்ததுமே .. - OSHO
நீங்கள் விழிப்புணர்வுடன்
இருக்க ஆரம்பித்ததுமே ..
நீங்கள் ஒரு வித்தியாசமானவராக
ஆகி விடுகிறீர்கள் ...
தியானம் செய்யும் பொழுது
உள்ளுணர்வுடன் சாட்சியாக இருங்கள் ...
வெளியே எது நடந்தாலும் உங்களுக்கு
உள்ளே உள்ள மையம் அதை ...
கவனித்துக் கொண்டே இருக்கிறது ...
இந்த மையம் கவனிப்பவராக
இருந்து வருகிறது ...
உங்கள் உடல் அனேக செயல்களை
செய்து கொண்டிருக்கலாம் ...
உங்கள் மனம் இப்படியும் அப்படியும்
சுற்றிக் கொண்டே இருக்கலாம் ...
ஆனால் உள்ளே உள்ளவன் அதை
கவனித்துக் கொண்டே இருக்கிறான் ...
அதனால் கனிப்பதை தொடர்ந்து
ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் ...
கவனித்தலின் தொடர்பை இழந்து
விடாதீர்கள் ...
நீங்கள் வெளியில் செயல்படுபவராக
மட்டுமில்லாது ...
உள்ளேயிருந்து கவனிப்பவராகவும்
இருங்கள் ...
இந்தக் கவனித்தல் கணத்துக்குக் கணம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும் ...
நீங்கள்
தியானம் செய்யும் போதும் ,
நடந்து செல்லும் போதும் ,
உணவு உட்கொள்ளும் போதும் ...
குளிக்கும் போதும் ,
தூங்கும் போதும் ...
மற்றவருடன் பேசும் போதும் ,
நிகழ்கின்ற ஒவ்வொன்றையும் ...
சாட்சியாக இருந்து கவனித்துக்
கொண்டே வாருங்கள் ...
நீங்கள் இப்படி தொடர்ந்து சாட்சியாக
கவனித்துக் கொண்டிருப்பது ...
உங்களுக்கு உள்ளே உள்ள கடவுளை
விழிப்படைய செய்ய வைக்கும் ...
ஓஷோ ...
ஞானத்திற்கு
ஏழு படிகள் ...
Comments
Post a Comment