முல்லா நஸ்ருதீன், ஒருமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். - OSHO
முல்லா நஸ்ருதீன், ஒருமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். நாங்கள் பழைய நண்பர்கள் என்பதால் பார்க்கப் போக வேண்டியிருந்தது.
"நீங்கள் நல்ல அறிவாளி ஆயிற்றே! எப்படி பிடிபட்டீர்கள்?"என்று அவரிடம் கேட்டேன்.
"என்னத்தச் சொல்லட்டும்? நான் செய்த தவறினால் திருடும்போது பிடிபட்டு விட்டேன்." என்றார் முல்லா.
"என்ன நடந்தது?"
"மூன்று மாதகாலம் நான் சிரமப்பட்டு அந்த பணக்காரரின் வீட்டிலிருந்த நாயுடன் சிநேகம் செய்து கொண்டேன்.என்னுடைய அதிர்ஷ்டம் பாருங்கள். வீட்டிற்குள் நுழையும் போது, இருட்டில் படுத்திருந்த பூனையின் வாலை மிதித்து விட்டேன்.!"என்று விளக்கினார்.
இதுபோல் தான் நாம் வாழ்நாள் முழுவதும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். நாயைச் சிநேகம் பிடித்துக் கொண்டு,பூனையின் வாலை மிதித்து விடுகிறோம்.
பார்த்தறிய உங்களுக்குக் கண்கள் இல்லை.இருட்டில் அங்கும் இங்கும் ஓடி தடவுகிறீர்கள்.நீங்கள் விரும்பிய வெளிச்சம் அதுவா என்பதே கேள்வியாகும்.அங்கே வெளிச்சம் இருக்கிறதா என்பதே கேள்வி.
இருட்டில் என்றும் நீங்கள் திரும்பி வரமுடியாது. அங்கே வெளிச்சம் இருந்தால்,கதவு இருக்குமிடத்தை கண்டறிந்து அதன் வழியாக வெளியே வந்து விடலாம்.
தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள ஒருவன் விரும்புவது,இருட்டில் பொருள்களை அள்ளியெடுப்பதற்கு நிகரான காரியம்.
உங்கள் பாதை தவறானதால், நீங்கள் காணாமல் போக மாட்டீர்கள்.கண்கள் மூடியிருந்தால் மட்டுமே நீங்கள் காணாமல் போவீர்கள்.
உங்கள் கண்களை திறந்து கொள்ளுங்கள். நான் கண் என குறிப்பிடுவது உங்கள் விழிப்புணர்வு ஆகும்.
உங்கள் சுயநினைவற்ற நிலை விடுபட்டு, விழிப்புணர்வு நிலை வளர வேண்டும்.தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளவன் போல் நடந்து போகாதீர்கள்.விழிப்போடு செல்லுங்கள்.!
--ஓஷோ--
Comments
Post a Comment