ஒரு தடவை மிகவும் பழமையான ஒரு சாலையின் வழியாக நான் சென்று கொண்டிருந்தேன்...- OSHO
ஒரு தடவை மிகவும் பழமையான ஒரு சாலையின் வழியாக நான் சென்று கொண்டிருந்தேன். அது கோடைகாலம்.
திடீரென மிகவும் சேறு நிறைந்த ஒரு பாதையை எதிர்கொண்டேன். இந்தச் சாலை இந்த அளவுக்கு சேறு நிரம்பியதாக இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
மழை எதுவும் பெய்திருக்கவில்லை. ஆனால் ஏறக்குறைய அரைமைல் நீளத்திற்கு ஒரே சேறாக இருந்தது.
ஆனால் அது அவ்வளவு ஆழமாக இருக்க முடியாது என்று நினைத்தேன். எனவே காரை ஓட்டிக்கொண்டு அவ்வழியில் சென்றேன்.
ஓரிடத்தில் சிக்கிக்கொண்டேன். அப்பாதை சேறு நிரம்பியதாக மட்டுமில்லை, பல குழிகள் நிரம்பியதாகவும் இருந்தது.
பின் யாராவது உதவ வருவார்களா, சரக்கு வண்டி (டிரக்) ஏதாவது வருமா என காத்திருந்தேன்.
ஒரு சரக்குவண்டியுடன் ஒரு விவசாயி வந்தார். எனக்கு உதவுமாறு அவரிடம் கேட்டேன். அதற்கு இருபது ரூபாய் அவருக்கு தரவேண்டும் என்றார்.
"சரி, எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் என்னை இதிலிருந்து எடுத்துவிடுங்கள்" என்றேன்.
நான் விடுபட்டதும் விவசாயியிடம் "இந்த கட்டணத்திற்கு நீர் இந்த வேலையை இரவு பகலாக செய்தாக வேண்டும்" என்று சொன்னேன்.
அதற்கு அவர் "இல்லை, இரவில் செய்வதில்லை. ஏனெனில் ஆற்றிலிருந்து இந்த சாலைக்கு நான் நீர் கொண்டுவர வேண்டும். இங்கு இந்த சேற்றை உண்டாக்கியது யார் என நினைக்கிறீர்கள்? அதன்பின் நான் கொஞ்சம் தூங்கவும் வேண்டும், ஏனெனில் விடியற்காலையிலேயே என் வியாபாரம் தொடங்கிவிடுகிறது."
இவர்கள்தான் சாமியார்கள்.
முதலில் சேற்றை உருவாக்குகிறார்கள்.
தொலைதூர ஆற்றிலிருந்து நீர் எடுத்து வருகிறார்கள்.
பின் நீங்கள் கெஞ்சுகிறீர்கள், பின் அவர்கள் உங்களுக்கு உதவுகிறார்கள்.
சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. நீங்கள் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆசைப்படுவதை நீங்கள் நிறுத்தும்வரை நீங்கள் சுரண்டப்படவே செய்வீர்கள்.
--ஓஷோ--
Comments
Post a Comment