Google

ஓஷோவின் தீர்க்க தரிசனம்...……..



தயவு கூர்ந்து இப்பதிவை தவறவிடாதீர்கள்.
ஓஷோவின் தீர்க்க தரிசனம்...……..
ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்”.
அத்தியாயம் – 9-புயலின் கண்கள்
பகுதி-3 ஹரா விழிப்பு.....
.

எப்போதெல்லாம் உங்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லையோ, அப்போதெல்லாம் மெளனமாக அமர்ந்து,  உள்ளுக்குள் நகர்ந்து, வயிற்றில் விழுங்கள்  –  தொப்புளுக்கு இரண்டு இஞ்ச் கீழே இருக்கும் அந்த மையம்தான் ஹரா  –  அங்கேயே இருங்கள். அது உங்கள் வாழ்க்கை சக்தி முழுவதையும் மையப்படுத்தும்.  நீங்கள் அதனுள் பார்க்க வேண்டும்,  பின் அது செயல் படத்துவங்கும்:  உங்கள் முழுவாழ்க்கையும் அந்த மையத்தைச் சுற்றி நகர்வதை உணர்வீர்கள்.
.
அந்த ஹராவிலிருந்துதான் வாழ்க்கை துவங்குகிறது அந்த ஹராவில்தான் வாழ்க்கை முடிகிறது. நமது உடலின் எல்லா மையங்கள் தொலைவில் இருக்கிறது.  ஹராதான் மையத்திலிருக்கிறது.  அங்கேதான் சரிசமமாகி, வேரூன்றி இருக்கிறோம்.  அதனால் ஒருவர் ஒருமுறை ஹராவை பற்றி தெரிந்துகொண்டால், பல விஷயங்கள் நடக்க துவங்கும்.
.
உதாரணமாக,  நீங்கள் ஹராவை அதிகம் நினைவில் கொள்ளும்போது, யோசனை குறைந்துவிடும்.  தானாகவே, யோசனை குறையும். காரணம் தலைக்கு நகரும் சக்தி குறைந்துவிடும்,  அது ஹராவிற்கு செல்லும்.  நீங்கள் ஹராவை அதிகம் நினைக்கும்போது,  நீங்கள் அதில் அதிககவனம் செலுத்துகிறீர்கள்.  உங்களுக்கு அதிகமான ஒழுக்கம் எழுவதை காண்பீர்கள்.  அது இயற்கையாக வரும்;  அதை திணிக்கவேண்டியதில்லை.  நீங்கள் ஹராமையத்தை பற்றி அதிக அளவில் விழிப்பு கொள்ளும்போது, நீங்கள் இறப்பைப்பற்றி குறைவாக அஞ்சுவீர்கள், காரணம் அதுதான் இருப்பிற்கும்,  இறப்பிற்குமான மையம்.
.
ஒருமுறை நீங்கள் அந்த ஹராமையத்தோடு இசைந்துவிட்டால், நீங்கள் தைரியமாக வாழலாம்.  அதிலிருந்து துணிச்சல் வருகிறது  –  குறைவான சிந்தனை,  அதிக மெளனம்,  குறைவான கட்டுபாடற்ற தருணங்கள், இயற்கையான கட்டுப்பாடு,  தைரியம்,  ஒரு வேரூன்றுதல்,  ஒரு மண்ணில் இறங்கி இருத்தல்.
.

இரவுப்புகலிடம்;
.
நீங்கள் வலஇடமாக ஒருமாதிரி அலைபாய்வதாக உணர்ந்தால், உங்களுக்கு உங்களது மையம் எங்கிருக்கிறது என்பதே தெரியவில்லை என்று பொருள். அது நீங்கள் ஹராமையத்தோடு தொடர்பிலில்லை என்பதையே காட்டுகிறது,  அதனால் நீங்கள் அந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
.
இரவில் நீங்கள் தூங்கச்செல்லுமுன்,  படுக்கையில் படுத்துக் கொண்டு, உங்கள் இரண்டுகைகளையும் தொப்புளுக்கு இரண்டுஇஞ்ச்க்கு கீழே வைத்து, கொஞ்சம் அழுத்துங்கள்.  பிறகு சுவாசிக்க ஆரம்பியுங்கள்,  ஆழமாக சுவாசியுங்கள்.  சுவாசத்தோடு சேர்ந்து அந்த மையம் மேலெழம்பி கீழே போவதை நீங்கள் உணர்வீர்கள்.  அங்கிருக்கும் உங்கள் முழுசக்தியும் சுருங்கி,  சுருங்கி , சுருங்கி நீங்கள் அங்கே ஒரு சின்னமையமாக, குவிக்கப்பட்ட சக்தியாக மாறி விட்டதாக உணருங்கள்.  இதை பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் செய்யுங்கள்,  பிறகு தூங்கச்செல்லுங்கள்.
.
அதைச் செய்தபடியே தூங்கப்போகலாம்;  அது உதவும்.  பிறகு அந்த இரவு முழுவதும்,  அந்தமையம் இருக்கும். மறுபடியும் மறுபடியும் ஆழ்உணர்வுநிலை சென்று அங்கே மையம் கொள்ளும்.  உங்களுக்குத் தெரியாமலேயே,  அந்த இரவு முழுவதும்,  நீங்கள் பல வழிகளில் அந்த மையத்தோடு ஆழ்ந்த தொடர்பில் இருப்பீர்கள்.
.
காலையில்,  தூக்கம்போன உணர்வு வந்ததருணம், உங்கள் கண்களை முதலில் திறக்காதீர்கள்.  மறுபடியும் உங்கள் கைகளை அங்கே வையுங்கள், கொஞ்சம் அழுத்துங்கள்,  சுவாசிக்க ஆரம்பியுங்கள்.  மறுபடியும் அந்த ஹராவை உணருங்கள்.  இதை பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு செய்யுங்கள். பிறகு எழுந்திருங்கள்.   இதை ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு காலையிலும் செய்யுங்கள். மூன்று மாதங்களுக்குள் நீங்கள் மையப்பட்டிருப்பதை உணர்வீர்கள்.

***

மையத்தில் இருப்பது மிகஅவசியம்,  இல்லையேல் ஒருவர் பிளவு பட்டிருப்பதாக உணர்வார். பிறகு அந்த ஒன்று என்பது ஒன்றாக இருப்பதல்ல, ஒரு துண்டு என்பதாக  –  எல்லாம் சிதறுண்டு  –  ஒரு தொகுதியாக இல்லாமல்,  ஒரு முழுமையாக இல்லாமல் போகிறது.  அது மோசமான அமைப்புமுறையில் இருப்பதாகும். காரணம் மையமில்லாமல், ஒருமனிதன் தன்னை இழுத்து கொண்டுதான் அலையமுடியும். நேசிக்க முடியாது. மையமில்லா விட்டாலும் நீங்கள் வழக்கமாக செய்கிற காரியங்களை உங்கள் வாழ்க்கையில் செய்யமுடியும், ஆனால் நீங்கள் ஒரு படைப்பாளியாக முடியாது.   நீங்கள் குறைந்தபட்சத்தில் வாழ்வீர்கள்: அதிகபட்ச வாழ்வானது உங்களுக்கு சாத்தியப்படாது.  மையமடைவதில்தான் ஒருவர் அதிகபட்சமாக,  உச்சத்தில், சிகரத்தில் வாழ்கிறார்,  அந்த உச்சகட்டம் நிகழ்கிறது.  –  அதுதான் உண்மையான வாழ்க்கை, அதுதான் வாழ்க்கையை வாழ்வது.
.

Comments