பிரபஞ்சம் இரண்டுவித சக்திகளால் ஆனது - OSHO
❤❤பிரபஞ்சம் இரண்டுவித சக்திகளால் ஆனது. மேல்மட்டத்தில் இரண்டும் எதிரெதிரானவை, ஆனால் ஆழத்தில் அவை எதிரெதிரானவை அல்ல. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அவற்றை யின் – யாங் என்றோ, சாதகம் – பாதகம் என்றோ, ஆண் – பெண் என்றோ கூறலாம். உண்மையில் யின் – யாங் எல்லா விதமான
எதிரெதிரானவற்றையும் இணைத்துச் செல்கிறது. அடிப்படை உண்மை என்னவென்றால்
எதிரெதிரானவை எதிரெதிரானவை அல்ல, முரண்பாடுகளல்ல, அவை ஒன்றோடு ஒன்றோடு இணைந்தவை,
ஒன்றை ஒன்று சமன் படுத்துபவை.
ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் உள்ள எதிர்மறை சக்தியை கண்டுபிடித்து ஒன்றாக இணைய தியானம் உதவுகிறது.
மனிதன் எனபவன் ஆண் பாகமும் பெண் பாகமும் ஒன்றாய் உள்ளே இணைந்தவன்தான்.
இந்த உலகின் பிரிவினைகள் அனைத்தும் மனதின் பிரிவினைகள்தான்.
யின் – யாங் என்பது ஒரு வட்டம், ஆண் தன்னுள் பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும், பெண் தன்னுள் ஆணை கண்டு பிடிக்க வேண்டும்
--ஓஷோ--
Comments
Post a Comment