Google

உனது கண்ணாடியை சுத்தம் செய் - OSHO



❤ உனது கண்ணாடியை சுத்தம் செய்

அழகு என்பது அன்பின் உருவாக்கம்தான்.

அன்பிற்குரியவர் மிக அழகாக தோன்றுவார்,

அது அன்பு கொண்ட கண் உருவாக்குவது.

சாதாரணமாக மக்கள் அடுத்தவர் மிக அழகாக தோன்றியதால் தாங்கள் அன்பில் விழுந்து விட்டதாக நினைக்கின்றனர்.

உண்மை இதற்கு நேர் எதிரானது.

அவர்கள் காதலில் விழுந்து விட்டதால்தான் அடுத்தவர் மிக அழகாக தோன்றுகின்றனர்.

அன்பு தான் அடிப்படை.

அழகு உடல் சார்ந்தது மட்டுமல்ல,

அடிப்படையில் அது ஆன்மீக ரீதியானது.

உனது கண்ணாடியை சுத்தம் செய்,

உன்னைச் சுற்றி எவ்வளவு அழகு உள்ளது என்று பார்க்க முடியும்.

ஒரு படைப்பு செயல் இந்த உலகின் அழகை மேலும் வளப்படுத்தும்.

வன்முறையின்றி ஏதாவது நிகழும்போது
அது அதற்கே உரிய அழகை கொண்டுள்ளது.

எங்கெல்லாம் நீ அழகை பார்க்கிறாயோ

அப்போது நீ புனித பூமியில் நிற்பதை நினைவில் கொள்.

இறைமையின் முதல் தரிசனம்தான் அழகு ❤

❣ ஓஷோ ❣
-OSHO_Tamil

Comments