Google

நீங்கள் தான் உங்களுக்காக முடிவெடுக்க வேண்டும். - OSHO


தனது மகன் நாள் முழுவதும் மீன்பிடித்துவிட்டு வீட்டிற்கு போகும் போது அவனைப் பார்த்துவிட்ட போலீஸ்கார தந்தை அவனை ரோட்டில் நிறுத்தினார்.

"மகனே,இன்று ஏதாவது அதிர்ஷ்டம் அடித்ததா?"என்று கேட்டார்.

"ஆமாம் அப்பா" என்று கூறிய மகன் அழகான அரை டஜன் குளத்து மீன்களைக் காட்டுவதற்காக தனது கூடையைத் திறந்தான்.

"இது மிகவும் அதிசயம்! இவற்றை எங்கே பிடித்தாய்?" என்று போலீஸ்கார தந்தை கேட்டார்.

அதற்கு அவன்,

"இங்கே பக்கத்தில் தான் அப்பா பிடித்தேன்.இது  "தனியாருக்குச் சொந்தமானது"என்று எழுதிய ஒரு குறுகிய சந்து ஒன்று உள்ளது.

அதன் வழியாக நீங்கள் சென்றால் "அத்து மீறி நுழைபவர்கள் கைது செய்யப்படுவார்கள்"என்று கூறுகின்ற அறிவிப்பினை நீங்கள் காணலாம்.

அதிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளிப் போனால்,"இங்கு மீன் பிடிக்க அனுமதி இல்லை" என்ற அறிவிப்புடன் ஒரு பெரிய குளம் உள்ளது.அந்த குளத்தில்தான் நான் இந்த மீன்களைப் பிடித்தேன்." என்று கூறினான்.

இது போல் தான் வாழ்விலும் ....

உங்களுக்காக, உங்கள் நன்மைக்காக  வேறு யாரும் முடிவெடுக்க மாட்டார்கள்.என்பதை நினைவில் வைத்திருங்கள்.

அவர்களின் கட்டளைகள்,அவர்களின் ஆணைகள்,அவர்களின் நல்லொழுக்க விதிகள் ஆகியவை எல்லாம்
அவர்களின் நன்மைக்காகவே உள்ளன.

எனவே நீங்கள் தான் உங்களுக்காக முடிவெடுக்க வேண்டும்.

உங்களது வாழ்க்கையை நீங்கள் உங்களது சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

--ஓஷோ--

Comments