Google

மரணம் கதவைத் தட்டும் முன்னால் நீங்கள் - OSHO


மரணம் கதவைத் தட்டும் முன்னால் நீங்கள் உங்களை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளுங்கள்.

அந்த ஏற்பில் ஒரு மகா அற்புதம் நிகழும்.

உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் போது உங்களை விட்டு நீங்கள் விலகி ஓட மாட்டீர்கள்.

இது தான் அந்த அற்புதம்.

இப்போது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் என்னிடம் வரும் போது கூட உங்களிடமிருந்து தப்பித்துக்கொண்டு வரும் பதற்றத்தைத்தான் பார்க்கிறேன்.

அதனால்தான் உங்களால் என்னை அடைய முடியவில்லை.

நமக்குள்ளே ஒரு இடைவெளி வந்துவிடுகிறது.

உங்களிடமிருந்து தப்பிக்கொண்டு ஓடும் முயற்ச்சியில் என்னிடம் வந்தால் என்னை நீங்கள் முழுமையாக வந்து சேர முடியாது.

நீங்கள் உங்களிடமிருந்து தப்பித்து ஓடக்கூடாது என்பதற்குத்தான் இவ்வளவு சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன் <3

<3 ஓஷோ
பாதை சரியாக இருந்தால்  <3

Comments