மனமின்மையே தியான நிலை - OSHO
மனமின்மையே
தியான நிலை
ஒஷோ,,,,,
ஒருமுனைப்படுத்தப்பட்ட மனிதனின் கவனத்தை சிதறடிப்பது மிகவும் எளிது.
வெளியில் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு கூட அவனது கவனத்தைச் சிதறடித்து விடும்.
ஏனென்றால் அவன் இயற்கைக்கு புறம்பான ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறான்.
ஒரு குழந்தை அழுதால் போதும் அவனுடைய தியானம் கலைந்து விடும்.
ஆனால் உண்மையான தியானத்தில் ஆழ்ந்திருப்பவனை வெளி நிகழ்வுகள் எதுவுமே தொந்தரவு செய்யாது.
ஏனென்றால் அவன் மனதை ஒரு முனைப்படுத்தும் முயற்சியில் இறங்கவேயில்லை.
நீங்கள் எந்த சத்தம் கேட்டாலும் எளிமையாக, அமைதியாக, கவனமாக எல்லாவற்றையும் பார்த்து, கேட்டு அனுபவித்தால் போதும்.
இதில் எதையும் நீங்கள் விலக்க கூடாது. நீங்கள் விலக்கும் நிகழ்வுதான் உண்மையிலேயே உங்கள் தியான நிலைக்கு இடையூறாக இருக்கும்.
ஒரு முனைப் Uடுத்துதல் என்பது இறுக்கமான நிலை. ஆங்கிலச் சொல் attention.
இந்த சொல்லின் வேரை ஆராய்ந்தால் அது
Tension. இறுக்கம் என்று பொருள்.
விழிப்பு நிலை என்பது வெறும் கவனம் இல்லை அதில் இறுக்கம் இல்லை. இயல்பான ஒரு தளர்வுதான் இருக்கிறது. அமைதியான ஓய்வு தான் இருக்கிறது.
இப்படியே தொடர்ந்து விழிப்பு நிலையில் இருந்தால் .ஒரு காலகட்டத்தில் உங்கள் முதுகெலும்பில் எறும்பு ஊர்வது போன்ற ஒரு உணர்ச்சி தெரியும்.
உங்கள் குண்டலினி சக்தி மெதுவாக மேலே ஏறுவதை நீங்கள் உணர முடியும்
உள்ளே ஓர் ஒளி தெரியும் வண்ணங்கள் தெரியும். பல அழகான விஷயங்களை பார்ப்பீர்கள்.
இனவ எல்லாம் வெறும் கற்பனைதான். உங்கள் மனம் செய்யும் மாயாஜாலம்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
இதுதான் உத்தம நிலை என்று பேச ஆரம்பித்து விடாதீர்கள். என் கண் முன்னே ஏசு தெரிகிறார்
புத்தர் தெரிகிறார் கிருஷ்ணர் தெரிகிறார் என்று பிதற்ற ஆரம்பிக்காதீர்கள்.
ஆனால் இது மாதிரி நிகழ்ந்தால் நீங்கள் முன்னே தி கொண்டிருக்கிறீர்கள்.
புத்தர் உறுதியாக கூறுகிறார் "உங்கள் வழியில் என்னைப் பார்த்தால் இரக்கமில்லாமல் என்னைக் கொன்று விடுங்கள்"
இதன் பொருள் "நான் உங்கள் தியானத்தில் வந்தால் அது சிறந்த நிலை என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். ஏனென்றால் அது வெறும் எண்ணம்தான். அதுவே சிறந்தது என்று நினைத்து விட்டால் பின் அடுத்த நிலைக்கு முன்னேற முடியாது"
நீங்கள் தியானத்தில் செய்ய வேண்டியது எல்லாம் மதிப்பீடு செய்யாமல் நிகழ்வுகளை கவனிப்பது மட்டும்தான்.
ஒரு நாள் உங்கள் மனம் பரிபூர்ண ஓய்வுநிலைக்கு போய்விடும். அந்த நிலையில்தான் நிர்மலமான விழிப்புணர்வு பொங்கும்.
அந்த விழிப்புணர்வில் எல்லா ஆசைகளும் எண்ணங்களும் மறைந்து விடும்.
மனம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும்.
மனமின்மை என்ற நிலைதான் தியான நிலை.
Comments
Post a Comment