Google

எல்லாம் அவனே - சூஃபி மகான்,,,



எல்லாம்
அவனே
சூஃபி மகான்,,,

சூஃபி மகான் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்.

வாலிப வயதை எட்டாத ஒரு பையனும் வெறுங் காலோடு அங்கே நடந்து சென்று கொண்டிருப்பதை கண்ட மகான் "நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டார்.

மக்காவுக்கு " என்றார் அவர்.

ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தீரே, என்ன அது?

இறைவனின் வேதம்."

இந்த வயதிலேயே மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறீரே " என்றார் மகான்.

சிறுவர், பெரியவர் என்றெல்லாம் மரணம் பார்ப்பதில்லை."

இந்த சிறுவயதிலேயே இவ்வளவு பெரிய பயணத்தை மேற்கொண்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது. பாதங்கள் சிறியதாயினும் பயணம் மிகப் பெரியது. "

என்னுடைய பணி பாதத்தை தூக்கி வைப்பது மட்டுமே. இலக்கை அடைய வைக்க வேண்டியது இறைவனின் பணி " என்றார் இளைஞர்.

பயணத்திற்கான ஒரு பொருளுமின்றி, ஒரு வாகனமுமின்றி வந்திருக்கின்றீரே?"

நம்பிக்கையே என் பயணப் பொருட்கள். என் கால்களே என் வாகனம்."

உண்பதற்காக ஏதாவது பொருள் வாங்கி வந்திருக்கலாமே?"

பெரியவரே,,, உங்களுடைய நண்பர் தம் வீட்டிற்கு விருந்தளிக்க அழைக்கிறார் என்றால் நீங்கள் உங்களுடன் ரொட்டியும் தண்ணீரும் சுமந்து கொண்டா செல்வீர்கள்?

அதே போல என் இறைவன் என்னைத் தம் இல்லத்திற்கு அழைத்திருக்கிறான் எல்லாவற்றையும் தரிசிக்கச் செய்திருக்கிறான் என்றால் பயணத்திற்கான பொருட்களை எடுத்து வருவது அவன் மீது நமக்குள்ள நம்பிக்கையின்மையை அல்லவா காட்டுகிறது?"

எனக்கு அது பிடிக்கவில்லை. பணிவை மட்டுமே நான் விரும்புகிறேன். என்னை அவன் கைவிட்டு விடுவானா?"

இவ்வாறு கூறிவிட்டு அந்த இளைஞன் மளமளவென்று அவரைக் கடந்து வேகமாக சென்று விட்டான்.

சூஃபி மகான் மெய்மறந்து நின்றார்.

Comments