Google

ஒரு பைத்தியக்காரன், ஒரு புத்தராக ஆக முடியுமா? - OSHO




ஒரு பைத்தியக்காரன், ஒரு புத்தராக ஆக முடியுமா?

பைத்தியக்காரன் மட்டுமே புத்தர் ஆகமுடியும்.!

தத்துவவாதிகள்,புத்தர்கள் ஆக முடியாது.! புத்தர் ஆவதற்கு தைரியம் தேவை.

ரஷ்ய சிறையில் இருந்த தத்துவவாதிகள் ஒரு குழு ஒன்று தப்பிக்க முடிவு செய்தது. அவர்களிடம் மாற்று சாவி ஒன்று இருந்தது.

எனவே தாங்கள் தப்பிப்பதற்கு இரவு வரும்வரை காத்திருந்தனர். நடு இரவில் அவர்களில் ஒருவர் கதவைத் திறப்பதற்குப் போனார்;ஆனால் சில நிமிடங்களில் சோகமான முகத்துடன் திரும்பி வந்து விட்டார்.

மற்றவர்கள் அவரிடம், "என்ன நடந்தது?" என்றனர்.

அதற்கு அவர், "நமது திட்டம் பயனற்றது. நாம் தப்பிக்க முடியாது. பைத்தியக்கார காவலாளி கதவைப் பூட்டுவதற்கு மறந்து விட்டான். எனவே என்னால் இந்தச் சாவியை பயன்படுத்த முடியாமல் போய்விட்டது." என்று பதிலளித்தார்.

பைத்தியக்காரன் மட்டுமே புத்தர் ஆகமுடியும்.! பைத்தியமில்லாத மக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் எல்லாம் அதிகபட்சம் பௌத்தர்கள் ஆக முடியுமே தவிர ஒரு புத்தராக ஆக முடியாது.

பைத்தியக்காரன் மட்டுமே புத்தராக முடியும்.

உலகில் உள்ள பைத்தியங்களுக்கு மட்டுமே நான் அழைப்பு விடுக்கிறேன்.

நான் பைத்தியக்காரர்கள் மெய்ஞ்ஞானிகளாக ஆவதற்கான ஒரு வழிகாட்டி.

--ஓஷோ--

Comments