முதலில் கிடைத்துள்ள வாழ்க்கையை சந்தோஷமாக வாழு. - OSHO
முதலில் கிடைத்துள்ள வாழ்க்கையை சந்தோஷமாக வாழு.
பணம் இருந்தால் அருமையான இசையை கேட்டவாறு
அழகான ரூமில் நடனமாடு.
ஏழை என்றால் நிலவின் வெளிச்சத்தில்
இரவில் வண்டுகளின் ரீங்காரத்தில்
பறவை பாடல்களின் இடையே
திறந்த வெளியில் நடனமாடு.
ஏன் குறை சொல்கிறாய்....???
வாழ்விடம் பிச்சைக்காரனாய் போகாதே,
மகாராஜாவாய் போ
ஆகவே ஒருமையோடு இரு.
உள் பிளவுகள் இப்போது வலுவிழக்கும்.
உள் போராட்டம் இருக்காது.
அப்போது சக்தியுள்ளவனாய் நீ இருப்பாய்.
வாழ்ந்து பார்க்கும் ஆற்றல் உள்ளவனாய் நீ மாறுவாய்.
இங்கிருந்துதான் எதுவும் சாத்தியம்.
இப்போது நீ தியானம் செய்து பார்க்கலாம்.
தியானத்தில் ஒரு உள் சூழலை நாம் உருவாக்குகிறோம்.
அந்த சூழல் மனதை கடந்த அனுபவம் பெறுவதற்கு உதவி செய்யலாம் 💃🏽
🌹 ஓஷோ 🌹
Comments
Post a Comment