Google

உண்மையைப் பற்றி யோசிக்கிற நபர் தவறாகப் புரிந்து கொள்வார். - OSHO



❤ உண்மையைப் பற்றி யோசிக்கிற நபர் தவறாகப் புரிந்து கொள்வார்.

உண்மையைப் பற்றிய எல்லா சிந்தனைகளும் தவறானது.

நீங்கள் சிந்திக்க துவங்கிய நொடியில் தர்க்க ரீதியான பாதையில் யோசிப்பீர்கள்.

யதார்த்தமோ முரண்பாடானது.

அது ஒன்றை ஒன்று குறுக்கிடாது.

அவை இணையாக ஓடும்.

ஆனால் சந்தித்துக் கொள்ளாது.

இருத்தலின் இந்த முரண்பாட்டிற்கு இன்னொரு பெயர் புதிர்.

புதிர் என்பது விடுகதை அல்ல.

புதிர் என்பது பிரச்சினை அல்ல.

காரணம், அதைத் தீர்க்கவே முடியாது.

அதைத் தீர்க்க வழியே கிடையாது.

அதில் வாழ்ந்தாக வேண்டும்.

அனுபவித்தாக வேண்டும்.

இருந்தாலும் அது என்னவென்று உங்களால் பதில் சொல்ல முடியாது.

அதற்குப் பதில் சொல்லத் துவங்கிய நொடியில் நீங்கள் மொழியைக் கொண்டுவர வேண்டும்.

மொழி ஒரு தர்க்கம்.

தர்க்க சிந்தனையில் உருவானது மொழி.

அதனால் மொழி போதுமானதல்ல.

உண்மையை வெளிப்படுத்த அது முழுமையாகப் போதுமற்றது.

உண்மை மௌனத்தின் மூலமாகத்தான் வெளிப்படும்.

ஆனால் மௌனம் மறுபடியும் ஒரு புதிர்.

இந்தப் பாதையில் நீங்கள் எதிர்கொள்ளும் முதல் முரண்பாடு :
மனம் சரியான கேள்வியைக் கேட்காது.

சரியான கேள்வியைக் கேட்கிற அதிகாரம் அதற்கு இல்லை.

சரியான கேள்வியைக் கேட்பதே உடனடியாக சரியான பதில் வேண்டுமென்பதுதான்.

உண்மையில், சரியான கேள்விதான் விடை. மனதின் உலகிற்கு இரட்டைத்தன்மை உண்டு.

கேள்வி பதில் இரண்டும் வெவ்வேறானது.

யதார்த்த உலகில் சரியான கேள்விதான் விடை.

உங்களால் சரியான கேள்வி கேட்க முடியுமென்றால் கேட்கவே வேண்டாம்.

சரியான கேள்வியைப் புரிந்து கொள்ளும் திறனே சரியான பதிலைப் புரிந்துகொள்ளப் போதுமானது.

ஆனால் சரியான கேள்வியை மனதால் கேட்கவே முடியாது.

சிந்தனையற்ற மனதினால் மட்டுமே அதைக் கேட்க முடியும்.

ஆனால் சிந்தனையற்ற மனம் எதுவுமே கேட்காது.

இதுதான் எதிர்கொள்ளும் முதல் முரண்பாடு.

மனது கேள்வி கேட்கிறது.

ஆனால் மனதினால் எழுப்பப்படும் எல்லாக் கேள்விகளும் தவறாக இருப்பதுண்டு.

காரணம் மனதே தவறானது.

அந்த நிலையிலிருந்து எழும் எதுவுமே தவறானதுதான்.

தவறான கேள்வி சரியான விடைக்குக் கொண்டு செல்ல முடியாது.

மனம் பல லட்சம் கேள்விகளைக் கேட்கும்.

எங்கேயுமே இந்தக் கேள்விக்கான விடையில்லை.

சிந்தனையற்ற மனதிற்கு விடை தெரியும்.

ஆனால் சிந்தனையற்ற மனம் கேள்வியே கேட்காது.

அது சுலபமாக, வீட்டிலிருப்பதைப் போல யதார்த்தமாக இருக்கும்.

அதனால் கேள்வியே எழாது.

கேள்வியே எழாததுதான் விடை ❤

❣ ஓஷோ ❣
-OSHO_Tamil

Comments