மக்கள் வாழ்வைக் கண்டு பயப்படுகிறார்கள் - OSHO
மக்கள் வாழ்வைக் கண்டு பயப்படுகிறார்கள். நீ நீயாய் இருக்க முடியும்போது தான் வாழ்க்கையை வாழ்வது சாத்தியமாகும். அப்படி தானாய் இருக்க முடியாததால்தான் வாழ்வைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆடுவதில், பாடுவதில், நேசத்தில் நீ நீயாய் இருக்க வேண்டும். எதற்காக பயப்பட வேண்டும் நீ எதையும் இழக்கப் முடியாது. நீ பெற வேண்டியதுதான் உள்ளது.
உன்னுடைய தானாயிருத்தல் யாருக்கும் கெடுதலை உண்டுபண்ணவில்லையென்றால் அது மிகவும் ஆன்மீகமானது.
மிகவும் நாகரீகமானவனாக இருப்பது ஆபத்தாகக் கூட அமையலாம். ஒரு சிறிதளவாவது தானாய் இருப்பது நல்லது.
உன்னுடைய தானாயிருத்தல் உன்னுடைய சுதந்திரத்தன்மையின் வெளிப்பாடே.
நீ நீயாய் இருப்பதற்கு பயப்படுமாறு வளர்க்கப்படுவது எல்லோருக்கும் நிகழும் ஒன்றே.
தன்னியல்புப்படி இருப்பதில் எந்த தவறையும் நான் காணவில்லை. 💓💓💓💓💓
Comments
Post a Comment