லாவோட் சூ கூறுகிறார்: - OSHO
லாவோட் சூ கூறுகிறார்:
" வாயிற் படி தாண்டாமலேயே ஒருவர் உலகில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் "
அடி ஆழத்தில் நீயே உலகம்
நீதான் அண்டமாக விரிந்திருக்கிறாய்
நீ உன்னைத் தெரிந்து கொண்டால் மானுடம் முழுக்கத் தெரிந்து கொண்டவன் ஆகிறாய்
எல்லாமே உனக்குள் நடக்கின்றன
தன்னைப் புரிந்து கொண்டவன் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறான்
மனிதனே மானுடம்
நீயேதான் உலகம்
முடிந்த முடிவாக இருப்பதை உனக்குள்ளேயே
கண்டு கொள்வாய்
எந்த ஒன்றை தெரிந்து கொண்டால்
அனைத்தையும் தெரிந்து கொள்வது?
அந்த ஒன்று "நீதான்"
--ஓஷோ--
Comments
Post a Comment