Google

சாதாரண அறிவு காரணத்தைத் தேடிச் செல்கிறது...- OSHO



சாதாரண அறிவு காரணத்தைத் தேடிச் செல்கிறது.

உயர் அறிவு முடிவான இலக்கை நோக்கிச் செல்கிறது.

உயர் அறிவு வருங்காலத்தினுள் செல்கிறது.

சாதாரண அறிவு கடந்த காலத்தை நோக்கிச் செல்கிறது.

சாதாரண அறிவை "அன்பு என்றால் என்ன?" என்று கேட்டால், அது வெறும் பாலுணர்வு என்று கூறிவிடும்-இது கீழ்நிலையில் உள்ளது.

சாதாரண அறிவு பிரார்த்தனை என்பது அடக்கப்பட்ட பாலியல் என்று கூறிவிடும்.

"பாலியல் என்றால் என்னவென்று?" உயர் அறிவைக் கேட்டால் அதுதான் பிரார்த்தனையின் விதை என்று கூறும்.பாலியல் அன்பாய் வளரக்கூடியது என்று கூறும்.

சாதாரண அறிவு எல்லாவற்றையும் கீழ்மட்டத்திற்கு இறக்கி நிரவி விடுகிறது. சாதாரண அறிவு ஒரு தாமரையை சேற்றின் நிலைக்கு தாழ்த்திவிடும்.

உயர் அறிவு சேற்றை தாமரையின் நிலைக்கு உயர்த்தி விடும்.வெறும் சேற்றில் தாமரையின் அழகு உள்ளடங்கியவாறு உள்ளது என்று கூறும்.

உயர் அறிவு பல பொருள்களை ஒன்றிணைக்கும் முறைமையாகும்.

உயர்-அறிவுடைய ஒருவர் எப்போதும் உயர்நிலையில் உள்ள முழுமையையே காண விழைவார்கள்.

கீழ்நிலையில் உள்ள பகுதியும் தனித்து நிற்காமல் முழுமையில் சேர்ந்து கலந்து ஒரு சம்மேளன இசையை உருவாக்கும்போது தான் அங்கு முழுமை இருக்கிறது.

இதையே உயர் அறிவு தேடிச் செல்கிறது. சாதாரண அறிவு கீழ்நோக்கிச் செல்கிறது.

உயர்அறிவின் நோக்கம் மேன்மேலும் உயர்ந்து சென்று முடிவான,உய்விருப்பின் உச்சியை அடைவதேயாகும்.

உயர்மட்டத்தில் இருந்துதான் விஷயங்களை விளக்க முடியும். கீழ்நிலையிலிருந்து விளக்க முடியாது.

தாழ்நிலையில் எல்லா அழகும்,உண்மையும், உயர்குணமும் அழிந்து விடுகிறது. பிறகு, "வாழ்வில் எந்த அர்த்தமும் இல்லையே" என்று அழுவீர்கள்.

--ஓஷோ--

Comments