Google

தத்துவமோ வேதாந்தமோ அல்ல வாழ்க்கை பிரச்னை. - OSHO



தத்துவமோ
வேதாந்தமோ அல்ல
வாழ்க்கை பிரச்னை.
ஓஷோ,,,,

வாழ்க்கைப் பிரச்னை தத்துவார்த்தமானதல்ல
எதார்த்தமான இருத்தல் அது.

அதை வெளியிலிருந்து தீர்க்க முடியாது
நீ ஒரு பார்வையாளன் அல்ல
அதில் நீ இருக்கிறாய்,,, அதுவே நீ தான்.

சரி தத்துவஞானம் என்றால் என்ன?
மகா மோசமான மொழிக் குழப்பம் அது.
அல்லது மிகச் சிறந்த மொழி ஆராய்ச்சி

அது எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும்
அது உன்னை எங்கும் கொண்டு சேர்க்காது.

ஏனென்றால் வாழ்க்கைச் சிக்கல் எதார்த்தமானது
அதைத் தீர்க்க மொழித் திறமையோ
இலக்கணமோ பயன்படாது.

ஓர் இருண்ட இரவில், ஒரு பக்கிரி
பாழ் கிணற்றின் ஓரமாக போய்க் கொண்டிருந்த போது, அபயக்குரல் கேட்டு, எட்டிப் பார்த்தார்.

என்ன ஆச்சு?" என்று கிணற்றுக்குள்
பார்த்துக் கேட்டார்.

ஐயா, நான் ஒரு இலக்கணப் புலவன்.
துரதிர்ஷ்டவசமாக உள்ளே விழுந்து விட்டேன்.
வழி தெரியவில்லை. அதனால் தான்
இப்போது நகர முடியவில்லை" என்றார்
உள்ளே கிடந்தவர்.

இரப்பா,,, ஒரு ஏணியும் கயிறும் கொண்டாறேன்"
என்றார் பக்கிரி.

ஒரு நிமிடம்,,,, உங்கள் பேச்சு இலக்கணப் பிழை.
அதை நான் திருத்தி விடுகிறேன்" என்றார்
உள்ளே விழுந்தவர்.

ஏணியையும் கவுத்தையும் விட அது முக்கியம்னா,
நான் நல்லாப் பேசக்கத்துக்கற வரை நீ அங்கேயே
கெட" என்று சொல்லி நகர்ந்தார் பக்கிரி.

ஓஷோ,,,,,,

Comments