Google

நீங்கள் அமைதியாய் இருக்கும்போது ... - OSHO



நீங்கள் அமைதியாய்
 இருக்கும்போது ...

இந்த உலகம் முழுவதும்
 அமைதியாய் இருக்கும் ...

இது ஒரு பிரதிபலிப்புத்
 தன்மை ...

நீங்கள் மௌனமாக இருந்தால்தான்
 உங்கள் ஆன்மாவால் ...

உங்களை வழி நடத்த
 முடியும் ...

ஆழ்ந்த மௌனம்தான் உங்கள் உள்முக
 தேடலை வரவழைக்கும் ...

சிந்தனைகளற்ற நிலையே
 மௌனம் ...

உங்கள் உய்விருப்புடன் ( existence )
நீங்கள் பேச வேண்டுமானால் ...

அதற்கு ஒரே வழி உங்கள்
 மௌனம்தான் ...

சிந்தனைகள் என்பது மனம்
 சம்பந்தப்பட்டது ...

உணர்ச்சிகள் என்பது இதயம்
 சம்பந்தப்பட்டது ...

வெற்றுத் தன்மை என்பது எந்தப்
 பொருளுடனும் சம்பந்தப் படாத நிலை ...

சிந்தனைகளோ ,
உணர்ச்சிகளோ ,

மனக் கிளர்ச்சிகளோ ,
இல்லாத நிலை ...

அதுதான் உண்மைப் பொருள்
 சாட்சித் தன்மை ...

அதுதான் உயிர்த்தன்மை ...

ஓஷோ ..

Comments