Google

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் எல்லாமே மாறுகிறது ... - OSHO



பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்
எல்லாமே மாறுகிறது ...

ஆனால் மூச்சு மட்டுமே மாறாத ஒன்றாக இருக்கிறது ...

உங்கள் வாழ்க்கையின் இயக்கமே
மூச்சில்தான் அடங்கியுள்ளது ...

உன் மூச்சுதான் உன் உடம்பிற்கும்
உனக்கும் இருக்கும் பாலம் ...

மூச்சுதான் உனக்கும் பேரண்டத்திற்கும்
இடையிலான பாலமாகவும் இருக்கிறது ...

மூச்சு நின்றுவிட்டால் நீ இந்த
பேரண்டத்தில் இல்லை ...

நீ வேறு ஏதோ தெரியாத பரிமாணத்திற்கு
சென்று விடுகிறாய் ...

அதன்பின் உன்னை இந்த காலவெளியில்
காண முடியாது ...

ஆகவே மூச்சு உனக்கும் காலவெளிக்கும
இடையே பாலமாக உள்ளது ...

நீ உனது சுவாசத்தில் ஏதாவது செய்ய
முடியுமென்றால் ....

நீ இந்த காலவெளியைக் கடந்து
சென்றுவிட முடியும் ...

மூச்சுக்கு இரண்டு முனைகள்
உள்ளன ...

ஒன்று உடலையும் , பேரண்டத்தையும்
அது தொடும் இடம் ...

மற்றொன்று உன்னையும்
பேரண்டத்தையும் ...

கடந்துள்ளதை அது தொடும்
இடம் ...

இந்த முனையை பற்றிய விழிப்புணர்வை
நீ அடைந்து விட்டால் ...

திடீரென்று நீ மாற்றமடைவாய்
வேறு ஒரு பரிமாணத்துக்குப் போவாய் ...

இந்த முனையுடன் உன்னை இணைத்துக்
கொள்வதே யோகா ...

யோகா உனது மூச்சை ஒரு ஒழுங்கிற்குள்
கொண்டு வருகிறது ....

அதன் மூலம் நீ இந்த பேரண்டத்தை
தாண்டிய ஒன்றுடன் இணைந்து விடுகிறாய் ...

இதற்கு யோகா துணை புரிகிறது ...

ஓஷோ ...
தந்த்ரா
தியான உத்திகள் ...

Comments