அன்பிற்குரிய ஓ ஷோ, உங்களது சொற்பொழிவில் நான் அமர்ந்திருக்கும் போது...- OSHO
அன்பிற்குரிய ஓ ஷோ,
உங்களது சொற்பொழிவில் நான் அமர்ந்திருக்கும் போது நான் உங்கள் மௌனத்தை உணர்கிறேன். நானும் அதில் ஒரு பகுதி போல உணர்கிறேன். இது ஒருவார்த்தைகளற்ற ஒருசெயல்பாடு. மேலும் மேலும் மௌனத்தில் கரைந்து போகிறது. அதே நேரத்தில், உங்களிடமிருந்து வார்த்தைகளும் வருகின்றன. நான் அவற்றைக் கேட்கிறேன். சட்டென்று மௌனத்திலிருந்து வார்த்தைகளுக்கு ஒரு தொடர்பு ஏற்படுகிறது. நான் உங்களது அன்பு மிகுந்த அருமையான வார்த்தைகளைப் பற்றி ஒரு தங்கமயமான நன்றியறிதலை உணர்கிறேன். மௌனமும் வார்த்தைகளும் ஒன்றுதான்.
இந்தச் செயல்முறையைப் பற்றித் தயவு செய்து ஏதாவது சொல்ல முடியுமா? அதாவது வார்த்தைகளால் வார்த்தையல்லாத ஒன்றைச் சொல்ல முடியுமா?
ஓ ஷோ: ஆம். வார்த்தையால் வார்த்தைகளற்றதைச் சொல்ல முடியும். ஆனால் இது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே நடக்கும். முற்றிலும் மௌனமாக உள்ளவர்களுக்கு மட்டுமே இது நடக்கும்.
மௌனத்திலிருந்து வெளிவருகிற வார்த்தை தன்னைச் சுற்றிலும் வார்த்தைகளற்ற மௌனத்தைச் சுமந்து கொண்டு வருகிறது. இப்போது, வி ஷயம் பெற்றுக் கொள்பவரைப் பொறுத்தது. அது வார்த்தைகள் நிரம்பிச் சலசலத்துக் கொண்டிருக்கும். ஒரு மனதால் பெறப்பட்டால், மௌனமும், வார்த்தையல்லாததும் அழிக்கப்பட்டு, நீங்கள் வார்த்தையை மட்டுமே கேட்கீறீர்கள்.
ஆனால் நீங்கள் மௌனமாக இருந்தால், நீங்கள் வார்த்தையைக் கேட்கீறீர்கள். வார்த்தை அல்லாததையும் கேட்கீறீர்கள். நீங்கள் ஒலியைக் கேட்கிறீர்கள், ஒலியற்றதையும் அனுபவிக்கிறீர்கள்.
மகாவீரரின் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு வினோதமான சம்பவம் சொல்லப்படுகிறது. அது உண்மையானதா வரலாற்று ரீதியானதா என்று கூறுவது கடினம். குறிப்பாக, வெளி உலகத்திற்கு இது முற்றிலும் முட்டாள்தனமாகவும அர்த்தமற்றதாகவும் தோன்றும். ஆனால் இங்கே, என்னால் உங்களுக்கு அந்தக் கதையைக் கூறமுடியும். மேலும், அது நடந்திருக்கக் கூடும் என்றும் கூறமுடியும். ஏனெனில் அது இங்கே நடந்து கொண்டிருக்கிறது. எனவே மகாவீரரின் காலத்தில் ஏன் நடந்திருக்க முடியாது என்பதற்குக் காரணம் இல்லை. காலம் இதில் தொடர்பற்றது ஆனால் இதைப்போன்ற ஒன்றை அனுபவித்துள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலரிடம் மட்டுமே இதைச் சொல்ல முடியும்.
மகாவீரர் ஒருபோதும் பேசவேயில்லை என்று சொல்லப்படுகிறது. வேதப் புத்தகங்கள் இருந்தபோதிலும் மகாவீரர் பேசவேயில்லை. மௌனமாகத்தான் இருந்தார்.
அவருடன் பதினோரு சீடர்கள் இருந்தார்கள். அவர்களும் ஆழமான மௌனத்தில் இருந்தார்கள். மகாவீரரின் மௌனத்திலிருந்து இவர்களுக்கு ஏதோ ஒன்று மாற்றப்பட்டது. இந்தப் பதினோரு சீடர்களும் வேதப் புத்தகங்களை எழுதினார்கள். அவர்கள் மகாவீரர் என்ன சொன்னார் என்று மக்களுக்குச் சொன்னார்கள். எனவே மகாவீரர் இதைச் சொன்னார். என்று சொல்லப்பட்ட போதெல்லாம் அவர் சொன்னது ஒரு நேரடி அறிக்கை அல்ல. மகாவீரர் பேசவேயில்லை மௌனமாக இருந்தார்.
ஆனால் அவருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களுக்கும் இடையே ஏதோ நிகழ்ந்தது. இவர்கள் அவரது கருத்துக்களை எடுத்துச் சொல்பவர்களாயினர். அவர்கள் இவரது செய்தியைப் பரப்பினார்கள்.
அவர்கள் சரியான வி ஷயத்தைத்தான் கேட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? அவர்கள் தாங்கள் கேட்பதாகக் கற்பனை செய்து கொள்ளவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்? அவர்கள் தங்களுடைய சொந்த வி ஷயங்களைப் பேசவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இங்கே ஒரு உத்தரவாதம் உள்ளது. அது என்னவென்றால் பதினோரு பேரும் ஒரே வி ஷயத்தைத்தான் கேட்டார்கள். மொத்தப் பேரும் தாங்கள் கேட்டதை உடனடியாக எழுத வேண்டியிருந்தது. எல்லோருமே ஒரே விஷயத்தைக் கற்பனை செய்திருக்க முடியாது என்பதால் அது முழு உத்தரவாதம் ஆயிற்று. அவர்கள் நிச்சயமாகக் கேட்டிருந்தார்கள். மௌனம் அவர்களிடம் பேசியது. மௌனத்திலிருந்து மௌனத்திற்குஅங்கே ஒரு கருத்துத் தொடர்பு நிகழ்ந்திருந்தது.
மகாவீரரைப் பின்பற்றுபவர்களால் இதை நிரூபிக்க முடியாது.
நான் பல ஜைன சந்நியாசிகளைக் கேட்டிருக்கிறேன். இதை உங்களால் நிரூபிக்க முடியுமா?
அதற்கு அவர்கள், “அவை உண்மையின் நாட்கள். இது இருண்ட காலம். இப்போது அதை நிரூபிக்கவும் முடியாது. அனுபவித்து உணரவும் முடியாது” என்று கூறினார்கள்.
அவர்களுக்கு இது ஒரு நம்பிக்கை மட்டுமே. பெரும்பாலும் அதைப்பற்றி அவர்கள் பேசுவதிலலை. ஏனெனில் அது அவர்களைச் சங்கடத்தில் ஆழ்த்துகிறது. யாராவது ஒரு கேள்வியை எழுப்பினால், அதற்கான சரியான விடை அவர்களிடம் கிடையாது.
ஆனால் இந்த மர்மமான கல்விக்கூடத்தில் அது நடந்து கொண்டிருக்கிறது. எனவே மகாவீரரின் கதை கற்பனையாக இருக்கலாம் என்ற கேள்விக்கு இடமில்லை.
எனது சந்நியாசிகள் மௌனத்தில் வளரும் போது, அதிக ஆழமான தியானத்திற்குள் நுழையும் போது அவர்கள் மேலும் மேலும் என்னுடன் ஒரு கள்ள வகையில் தொடர்பு கொள்கிறார்கள். முதலில் அவர்கள் எனது வார்த்தைகளைக் கேட்ப்பார்கள். என்னுடைய வார்த்தைகளுடன் சேர்ந்து, வார்த்தையல்லாத அந்தச் செய்தியைக் கேட்பார்கள்.
இரண்டாவது கட்டமாக, நான் வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் கூட இருக்காது. நான் சும்மா இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பேன். நீங்கள் வார்த்தையற்ற செய்தியைக் கேட்பீர்கள்.
நான் இந்த உடலைவிட்டு நீங்குமுன், இது பதினோரு பேருக்கு மட்டுமல்ல ஆயிரக்கணக்கானோருக்கு ஒரு உயிரியல் அனுபவமான இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இதுமட்டுமே மகாவீரரின் கதைக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒன்று. இருபத்து ஐந்து பகுத்தறிவு பற்றிய விஷயம் அல்ல. இது தியானத்தைப் பற்றியது. மகாவீரரின் வாழ்க்கை முழவதும் தியானத்தின் வாழ்க்கை என்பதை அறிய நீங்கள் வியப்படைவீர்கள். ஆனால் ஜைன மதத்தில் தியானம் மறக்கப்பட்டு விட்டது. மொத்த மதமும் ஒரு சடங்காக ஆகிவிட்டது.
எனவே இது உண்மை, எனது வார்த்தைகளோடு கூடவே நீங்கள் வார்த்தையல்லாததையும் கேட்கலாம். வெகுவிரைவில் வார்த்தைகள் இல்லாமலேயே வார்த்தைளற்றதைக் கேட்கலாம்.
அன்றைய தினம் ஒரு மகத்தான கொண்டாட்டத்தின் தினமாக இருக்கும். நான் உங்களுடன் பேச்சின்றிப் பேசுகிற தினம்.
ஓரு மௌனமான கூட்டம். சப்தமின்றி ஒரு தொடர்பு, ஒலிகளற்ற ஒரு இசை.. எதுவுமே சொல்லப்படுவதில்லை. ஆனால் எல்லாமே கேட்கப்படுகிறது. புரிந்து கொள்ளப்படுகிறது. உடனடியாக அனுபவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment