Google

புத்தரிடம் இருக்கும் ஒரே குணம் ... - OSHO



புத்தரிடம் இருக்கும்
ஒரே குணம் ...

விழிப்புணர்வு ,
பிரக்ஞை ,
சாட்சி பாவம் ...

நீங்கள் உடல் அல்ல
என்பதை சாட்சி பாவத்தோடு பாருங்கள் ...

நீங்கள் மனம் அல்ல
என்பதை சாட்சி பாவத்தோடு கவனியுங்கள் ...

நீங்கள் வெறும் சாட்சி பாவம் மட்டுமே
என்பதை சாட்சி பாவத்தோடு நோக்குங்கள் ...

உங்கள் தியானத்தில் மாற்றம்
நிகழும்போது ...

நீங்கள் பிரக்ஞைத் தன்மையை
அடைகிறீர்கள் ...

தியானம் உங்களுக்கு உட்புறத்தில் இருந்து
மாற்றத்தைக் கொண்டு வருகிறது ...

வெளியில் இருந்து திணிக்கப்படும்
ஒழுக்கம் , மதம் , ஆன்மிகம் ...

இவைகளால் எந்தப் பயனும்
ஏற்படப் போவதில்லை ...

உங்கள் தியானம் உங்களை ஆழத்தை
நோக்கி அழைத்துச் செல்கிறது ...

உங்கள் பரவசம் உங்களை உயரத்தை
நோக்கி அழைத்துச் செல்கிறது ...

அப்போது பரந்த வெளிக்காற்று வந்து
உங்களுக்குள் புகுந்து செல்லும் ...

பரவசம் என்பது எல்லாம் தாண்டியதின்
வசத்தில் இருப்பது ...

அதுதான் பரவசம்
ECSTASY ...

ஓஷோ ...
ஓஷோவின் வைரங்கள் ...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments