மனம் எப்போதும் அலைந்து கொண்டே இருக்கிறது ...
மனம் எப்போதும் அலைந்து
கொண்டே இருக்கிறது ...
மனம் எப்போதும் ஒரு குறிப்பிட்ட
புள்ளியில் இருக்காது ...
மனம் எப்போதும் நகர்ந்து
கொண்டே இருக்கும் ...
மனம் ஒரு எண்ணத்தில் இருந்து
மற்றொரு எண்ணத்திற்கு ...
தாவிக் கொண்டே இருக்கும் ...
மனம் என்பது ஓடிக் கொண்டே
இருப்பதால் மட்டுமே ஜீவித்திருக்கிறது ...
மனம் இல்லாமல் போகும் பொழுது
வெறும் உணர்வு நிலை மட்டுமே மிஞ்சும் ...
உணர்வு நிலை என்பதுதான் உனது
இயற்கை குணம் ...
மனம் என்பது ஒரு செயல்பாடு
அது ஒரு மன ஓட்டம் ...
ஓட்டத்தை நிறுத்தினால் உணர்வு
நிலைதான் மிஞ்சும் ...
மனமே நீ என்று நினைக்கிறாய்
இந்த தவறான நினைப்பே ...
மனதிற்கு ஒரு சுதந்திரத்தைக்
கொடுத்து விடுகிறது ...
நீ உனது உணர்வு நிலையில் , மையத்தில்
இருப்பது என்பது ...
உனது பிரபஞ்ச இருப்பின்
வேர்களைப் பற்றிய ...
விழிப்புணர்வை உன்னிடம்
உருவாக்கும் ...
உனக்கும் இந்த பிரபஞ்ச இருப்பிற்கும்
ஒரு தொடர்பு இருக்கிறது ...
ஒருவன் தனது மையத்தில் வேர்
கொள்ளும் போது ....
அவனுக்கு அந்த பிரபஞ்ச
பேரானந்த தன்மை ...
இயல்பானதாகி விடுகிறது ...
ஓஷோ ...
தந்த்ரா பாகம் 1
தியான உத்திகள் ...
Comments
Post a Comment