Google

உங்கள் ஆன்மாவும் என் ஆன்மாவும் வெவ்வேறு அல்ல ... - OSHO



உங்கள் ஆன்மாவும் என்
ஆன்மாவும் வெவ்வேறு அல்ல ...

நாம் எல்லோரும் ஒரே உயிர்த்தன்மையில்
தான் வாழ்கிறோம் ...

அதுதான் ஆன்மாவாக
இருக்கிறது ...

அதுதான் சக்தியாக
இயங்குகிறது ...

அதுதான் பிரக்ஞை நிலையாக உங்கள்
உள்ளே இயங்குகிறது ...

நாம் எல்லோரும் உடலால் வேறுபட்டு
இருக்கிறோம் அவ்வளவுதான் ...

மின்சாரம் என்பது மின் விசிறி ,
மின் விளக்கு , தொலைக் காட்சி ....

இப்படி ஆயிரக்கணக்கான கருவிகளை
இயக்குகிறது ...

கருவிகள்தான் வேறு வேறு தவிர
மின்சக்தி என்பது ஒன்றுதான் ...

நம் ஒவ்வொருவருடைய உடலும்
மனமும் வெவ்வேறாக இருக்கலாம் ...

ஆனால் எல்லோருடைய ஆன்மா அல்லது
உயிர்த்தன்மை ஒன்றுதான் ...

அதற்கு அழிவு என்பதே இல்லை
ஆனால் உடலுக்கும் மனதுக்கும் அழிவு உண்டு ...

உண்மையிலேயே ...

நீங்கள் வெறும் ஆன்மாவாக ....

வெறும் உயிர்த்தன்மையாக ...

வெறும் பிரக்ஞை நிலையாக
மட்டும் இருக்கிறீர்கள் ....

இதை மீண்டும் , மீண்டும் படித்து
தியானமாக்குங்கள் ...

ஓஷோ ...

Comments