Google

ஆணவம் எப்படி பிறந்தது? அமைதி எப்போது பிறக்கும்? - OSHO



ஓஷோ பதில் :
கேள்வி --
ஆணவம் எப்படி பிறந்தது?
அமைதி எப்போது பிறக்கும்?

ஓஷோ பதில் :

மனம் என்பது என்ன?

சேகரிப்பு தான் மனம்
மனம் என்றால் நினைவு.

தன்னுணா்வு உள்ளே இருக்கிறது.
நீ உள்ளே இருக்கிறாய்.
நான் என்பது இல்லாமல் இருக்கிறாய்.
உள்ளே நான் என்பது கிடையாது.

பிறகு
எப்படி நான், ஆணவம், என்பது உருவானது?

வெளி வட்டத்தில் ஒவ்வொரு கணமும்
தகவலறிவு,அனுபவம், நினைவுகள், ஆகியவை சேகரிக்கப்படுகிறது.

இது தான் மனம்.

மேலும் நீ எப்போது உலகத்தை பாா்த்தாலும்
நீ மனதின் மூலமாகப் பாா்க்கிறாய்.
எப்போது உனக்கு புது அனுபவம் கிடைத்தாலும், அதை நீ நினைவுகள் வழியாக பாா்க்கிறாய்.
அப்போது பார்ப்பது நினைவுகள் மூலம்
மாறுபாடு செய்யப்படுகிறது.
நீ எல்லாவற்றையும் கடந்த காலத்தின் வழியே பாா்க்கிறாய், அந்த கடந்த காலம்
ஒரு இடைத்தரகன் ஆகிவிடுகிறது.

தொடர்ந்து கடந்த காலத்தின் வழியே பாா்ப்பதால் நீ அதனுடன் அடையாளப்பட்டு
விடுகிறாய்.
அந்த அடையாளம் தான் ஆணவம்.

நான் ஒரு இந்து,
நான் ஒரு ஜெயின்

என்று கூறுகிறாய்.

ஆனால், உன்னுடைய தன்னுணா்வு இந்து அல்ல, அது அப்படி இருக்க முடியாது.
அது  வெறுமனே தன்னுணா்வு தான்.

நீ இந்து என்று கற்பிக்கப்பட்டிருக்கிறாய்.
இந்த பாடம் வெளி வட்டத்தில் சேகாிக்கப்பட்டுள்ளது.

எப்போதெல்லாம் நீ

ஏதாவது நினைவுடன்
ஏதாவது அனுபவத்துடன்,
ஏதாவது பெயருடன்
ஏதாவது உருவத்துடன்

உன்னை அடையாளப்படுத்தி கொள்கிறாயோ , அப்போதெல்லாம்
-நான்- பிறக்கிறது.

நீ இளைஞன்
நீ வயதானவன்
நீ செலவந்தன்
நீ ஏழை
நீ அழகானவன்
நீ அழகற்றவன்
நீ படித்தவன்
நீ படிக்காதவன்

இப்படி உன்னை சுற்றி சேகரமாகியுள்ள
விஷயங்களுடன் நீ உன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாய்
அப்போது "நான்" பிறக்கிறது.
இது தான் ஆணவம்.

ஆகவே நீ மெளனமாக இருக்கும் போது
ஆணவம் அங்கிருப்பதில்லை,

ஏனெனில், நீ அமைதியாக இருக்கும் போது
மனம் வேலை செய்வதில்லை.
அது தான் அமைதி என்பது.

எப்போது மனம் வேலை செய்கிறதோ அப்போது நீ அமைதியாக இல்லை.

மனம் வேலை செய்வது
உள்சப்தம்,
உள் அரட்டை,
ஒரு தொடா்ந்த உள் பேச்சு
உனக்குள்ளே ஓடிக் கொண்டேயிருக்கிறது
அந்த அரட்டையை நீ நிறுத்தினால்
அல்லது
அது அங்கில்லையானால்
அல்லது
நீ அதை கடந்து சென்று விட்டால்
அல்லது
நீ உள்ளே சென்று விட்டால்
உள்ளே நகர்ந்து விட்டால்

அங்கே அமைதி இருக்கிறது
மேலும் அந்த அமைதியில் எந்த
ஆணவமும் இல்லை.

ஆகவே நீ எப்போதும் அமைதியாக இரு.

🌷ஓஷோ

Comments