எல்லோருமே ஏராளமான குப்பைகளை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார்கள். - OSHO
எல்லோருமே ஏராளமான குப்பைகளை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் அது ஒன்றுதான் உடலில் உள்ள ஒரே இடம் நீங்கள் எதை வேண்டுமானாலும் அமுக்கி வைக்கிலாம். வேறு எங்கும் இடமில்லை. நீங்கள் எதையாவது அடக்கி வைக்க வேண்டுமானால் வயிற்றில் அடைத்து வைக்கலாம். உங்களுக்கு அழ வேண்டும். உங்கள் மனைவி இறந்துவிட்டாள்., உங்கள் நண்பர் இறந்துவிட்டார். ஆனால் அது பார்க்க நன்றாக இருக்காது, நீங்கள் பலவீனமாக இருப்பதாக காட்டும். ஒரு பெண்ணுக்காக அழுவது. நீங்கள் அதை அடக்குகிறீர்கள். அந்த அழுகையே எங்கே கொண்டு போய் போடுவீர்கள்? இயற்கையாக நீங்கள் வயிற்றில் தான் அடக்க வேண்டும்.அது ஒன்றுதான் உடலிலேயே உள்ள இடம், ஒரே ஒரு பள்ளம், அங்கேதான் அதைத் திணிக்க முடியும்.
நீங்கள் வயிற்றில் அடக்கினால், எல்லோரும் பல விஷயங்களை அடக்கியிருக்கிறார்கள். அவர்களின் உணர்ச்சிகள், அன்பு, காமம், கோபம், சோகம், அழுகை ஏன் சிரிப்பைக் கூட நீங்கள் வயிறு குலுங்க சிரிக்க முடியாது. அது மூர்க்கமாக, வக்ரமாக இருக்கும். நீங்கள் பக்குவப்பட்டவராக இல்லை. நீங்கள் எல்லாற்றையும் அடக்கி விட்டீர்கள். இந்த அடக்குதல் காரணமாக, உங்களால் ஆழமாக மூச்சு விட முடியாது. நீங்கள் மேலெழுந்தவாரியாகத்தான் மூச்சு விட முடியும். ஆழமாக மூச்சு விட்டால் இந்த அடக்குதலின் காயங்கள் அவர்கள் சக்தியை வெளியேற்றும். நீங்கள் பயன்படுகிறீர்கள். எல்லோருமே வயிற்றை நகர்த்த பயப்படுகிறார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன், வயிற்றினால்தான் மூச்சு விடுகிறது. ஒரு குழந்தை தூங்கும்போது பாருங்கள். வயிறு மேலும் கீழுமாகப் போய் வரும். மார்பில் அல்ல. எந்தக் குழந்தையும் மார்பில் மூச்சு விடுவதில்லை. அவர்கள் வயிற்றிலிருந்துதான் மூச்சு விடுகிறார்கள். அவர்கள் இப்போது முழுமையாக சுதந்திரமாக இருக்கிறார்கள். எதுவுமே அங்கே அடைக்கப்படவில்லை. அவர்கள் வயிறு காலியாக இருக்கிறது. அந்த வெறுமைக்கு உடலில் ஓர் அழகு இருக்கிறது. ஒரு முறை வயிற்றில் நிறைய அடைக்கப்பட்டிருந்தால், உடல் இரண்டு பகுதிகளாகப் பிரிகிறது. கீழே மேலே. பிறகு நீங்கள் ஒன்றல்ல இரண்டு. கீழ்ப்பகுதி என்பது கழற்றி விடப்பட்ட பகுதி. அதன் ஒற்றுமை குலைந்துவிட்டது. ஒரு இரட்டைத் தன்மை உங்கள் இருத்தலில் வந்துவிட்டது. இப்போது நீங்கள் அழகாக இருக்க முடியாது. நீங்கள் கவர்ச்சியாக இருக்க முடியாது. நீங்கள் ஒன்றுக்குப் பதிலாக இரண்டு உடல்களை சுமக்கிறீர்கள். அந்த இரண்டிற்கும் ஓர் இடைவெளி இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் அழகாக நடக்க முடியாது. எப்படியோ நீங்கள் உங்கள் கால்களை சுமந்துதான் செல்ல வேண்டும்.
உண்மையில், உங்கள் உடல் ஒன்றாக இருந்தால், உங்கள் கால்கள் உங்களை சுமந்து செல்லும். உங்கள் உடல் இரண்டாக இருந்தால், பிறகு நீங்கள்தான் கால்களை சுமந்து செல்ல வேண்டும்.
நீங்கள் உடலை இழுத்துச் செல்ல வேண்டும். அது ஒரு பாரத்தைப் போல நீங்கள் அதை ரசிக்க முடியாது. நீங்கள் ஒரு நல்ல நடையை ரசிக்க முடியாது. ஒரு நல்ல நீச்சலை நீங்கள் ரசிக்க முடியாது. ஒரு வேகமான ஓட்டத்தை நீங்கள் ரசிக்க முடியாது. காரணம் உடல் என்பது ஒன்றல்ல. இந்த எல்லா அசைவுகளும், அதை ரசிக்க வேண்டுமானால், உடலை மீண்டும் இணைக்க வேண்டும். ஓர் இணைப்பை மறுபடியும் நடத்தியாக வேண்டும், வயிற்றை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும்.
வயிற்றை சுத்தப்படுத்த ஓர் ஆழ்ந்த சுவாசம் தேவை. காரணம் நீங்கள் ஆழமாக மூச்சை உள்ளே இழுக்கும்போது, ஆழமாக மூச்சை வெளியே விடும்போது வயிறு அது சுமக்கும் எல்லாவற்றையும் எறிந்து விடும். மூச்சை விடும்போது, வயிறு தன்னை விடுவித்துக் கொள்கிறது. அதுதான் பிராணாயாமத்தின் முக்கியத்துவம். ஆழ்ந்த இசைவான சுவாசம். அழுத்தம் மூச்சை வெளியே விடுவதில் இருக்க வேண்டும். பிறகுதான் உள்ளே இருக்கும் வயிறு சுமந்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் வெளியேற்றும். பிறகு வயிறு உள்ளே உணர்ச்சிகளை தேக்கி வைக்காத போது, உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் அது காணாமல் போகும். நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை வயிற்றில் அடக்கி வைக்கும்போது மலச்சிக்கல் இருக்கும். காரணம் வயிறு சுதந்திரமாக நகர முடிவதில்லை. அதை ஆழமாகக் கட்டுப்படுத்துகிறீர்கள். அதற்கு நீங்கள் சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டால் அப்போது மலச்சிக்கல் இருக்கும். மலச்சிக்கல் என்பது உடலை விட மன நோய். அது உடலுக்கு என்பதை விட மனதுக்கு சொந்தமானது.
ஓஷோ (மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை பக்கம் 233 & 234)
Comments
Post a Comment