இயற்கை முழுவதும் காமத்தன்மை உள்ளதாகவே இருக்கிறது - OSHO
இயற்கை முழுவதும் காமத்தன்மை உள்ளதாகவே இருக்கிறது பூக்கள் இருப்பது காமத்தினாலேதான் ஏதோ ஒரு காம நிகழ்வுக்காகவேதான் எல்லா அழகும் நிலவுகிறது.
ஒரு தொடர்ந்த விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. மரங்கள் ஒன்றை ஒன்று வசீகரித்துக் கொண்டு உள்ளன. பறவைகள் பிற பறவைகளை கூவி அழைத்துக் கொண்டுள்ளன. எல்லா இடத்திலும் ஒரு காம விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.
இயற்கை காம மயமானது.
பேரின்பத்தை அடைய சிற்றின்பத்தை கடந்து அப்பால் செல்ல வேண்டியுள்ளது.
காமத்தை ஒரு படிக்கட்டாக பயன்படுத்துங்கள்.
அதனுடன் சண்டை பிடிக்காதீர்கள்.
அதைப் பயன்படுத்திக் கடந்து அப்பால் செல்லுங்கள்.
அதன் வழியாக இயங்குங்கள், அதன் வழி கடந்து செல்லுங்கள்.
அனுபவத்தின் மூலம் கடந்த நிலையை அடையுங்கள்.
விழிப்போடு கூடிய அனுபவமே கடந்த நிலை ஆகிறது.
--ஓஷோ--
Comments
Post a Comment