Google

நீ ஒருவரை நேசித்தால் நீ அவரை எல்லா குற்றங்குறைகளுடனும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறாய்.. - OSHO



நீ ஒருவரை நேசித்தால் நீ அவரை எல்லா குற்றங்குறைகளுடனும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறாய்.. ஏனெனில் அவை அவரின் பாகங்கள். ஆனால் அவை மாற ஆரம்பிக்கும். நினைவில் கொள் – அன்பு ஒருபோதும் மாற்ற முயற்சி செய்யாது, ஆனால் அது மாற்றிவிடும். நீ நேசித்தால் அது புரட்சியை கொண்டுவரும், ஆனால் அது காலடிசப்தம் கூட கேட்காத அளவு மிக அமைதியான முறையில் அந்த மாறுதலை கொண்டு வரும். யாருக்கும் என்ன நிகழ்கிறது என்றுகூட தெரியாது, ஆனாலும் எல்லாமும் மிகவும் அமைதியாக, மொட்டு மலர்ந்து மலராவது எப்படி யாருக்கும் தெரியாமல் சப்தமில்லாமல் நிகழ்கிறதோ அது போல மாறிவிடுவது நிகழும்.

       நீ நேசிக்கும் மனிதரை மாற்ற ஒருபோதும் முயற்சி செய்யாதே. ஏனெனில் அந்த முயற்சியே உன்னுடைய நேசம் முழுமையானதாக இல்லை, நீ அந்த மனிதரின் ஒரு பகுதியைத்தான் நேசிக்கிறாய், மற்றொரு பகுதியை நேசிக்கவில்லை என்பதை காட்டிவிடுகிறது. நான் உன்னை நேசிக்கிறேன், ஆனால் உன்னுடைய மூக்கு எனக்குப் பிடிக்கவில்லை, உன்னை எனக்குப் பிடிக்கும், ஆனால் உன்னுடைய முகம் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வது போல இருக்கும். ஒரு மிகவும் குண்டான பெண் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, இதுவரை ஒரே ஒருவர்தான் என்னை நேசிப்பதாக சொன்னார், ஆனால் அவரும் நான் உன்னுடைய ஆன்மாவை நேசிக்கிறேன், உன்னுடைய உடலை அல்ல என்று கூறினாள். ஆனால் எல்லா காதலர்களும் இது போன்ற விஷயங்களை கூறிக் கொண்டே இருக்கிறார்கள். நான் உன்னை நேசிக்கிறேன், ஆனால் என்னால் நீ சிகரெட் குடிப்பதை நேசிக்க முடியாது. அதை நான் வெறுக்கிறேன். ஆனால் இது ஒரு மறுதலிப்பு. ஆனால் அவருக்கு சிகரெட் குடிப்பது அவரது இருப்பின் ஒரு பாகம். அவரால் அதை விட முடியாது. அவர் அப்படித்தான். ஆகவே திடீரென அவர் சுருங்கிவிடுகிறார், அவர் ஏற்றுக்
கொள்ளப்படவில்லை. சிகரெட் குடிப்பது போன்ற ஒரு சாதாரண விஷயத்திற்காக நேசிப்பது போன்ற ஒரு அழகான விஷயத்தை நீ பாழ்படுத்தி விடுகிறாய். நீ நேசிக்கும்போது வெறுமனே நேசி. அந்த நேசம் மாறுதலை கொண்டு வந்தால் சரி. அப்படி அது மாறுதலை கொண்டு
வரவில்லையென்றாலும் சரிதான். நீ நேசிப்பதற்காகவே நேசி. போதும்.   *#‎ஓஷோ‬‬#***

Comments