Google

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைய இடம் , வெளி இருக்கிறது ... - OSHO



இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைய
இடம் , வெளி இருக்கிறது ...

ஆனால் அணுக்கள்தான் குறைவாக
இருக்கின்றன ...

இரண்டு அணுக்களுக்கு இடையில்
அந்த அணுக்களை விட ...

மிகப் பெரிய இடைவெளி
இருக்கிறது ...

அணுவுக்குள் நுழைந்தால் அங்கேயும்
எலெக்ட்ரான்கள் இடையே
இடைவெளி உள்ளது ...

இறுதியாக பொருண்மை முற்றிலும்
மறைந்து விடுகிறது ...

மேலை நாட்டு விஞ்ஞானிகள் இந்த
உண்மையை கண்டு பிடித்தார்கள் ...

ஆனால் நமது நாட்டில் பொருட்களைப்
பற்றி அதிகம் கவலைப் படவில்லை ...

ஆன்மாவைத் தேடினார்கள்
ஆன்மாவை உடலில் இருந்து மனதுக்குள்
தேடினார்கள் ...

மனதில் இருந்து ஜீவனுக்குள்
தேடினார்கள் ...

ஒரு கணத்தில் எல்லாமும் மறைந்து
போய் விட்டன ...

இறுதியில் ஏதும் அற்றதுதான்
இருந்தது ...

இதைத்தான் புத்தர் சூன்யம்
என்றார் ...

உனக்குள் ஏதும் இல்லை வெறும்
ஏதுமற்ற ஒரு பிரமாண்டம்தான் இருக்கிறது ...

அந்த ஏதுமற்றதில் இருந்துதான்
எல்லாமும் வந்தது என்பது தெரிய வருகிறது ...

ஜடம் என்று நினைத்து எல்லாம் ஜீவன்
என்பது தெரிய வருகிறது ...

வடிவற்றதும் வடிவுள்ளதும் ஒன்றுதான்
என்பது தெரிய வருகிறது ...

வடிவெடுத்தது பொருளாகிறது
வடிவெடுக்காதது வெளியாகிறது ...

வடிவம் எடுக்கும் ஒன்று அகந்தையாகிறது
தான் என்ற ஒன்றாகிறது ...

வடிவம் எடுக்காதது ஏதுமற்றது ஆகிறது
சூன்யம் ஆகிறது ...

பொருளும் அகந்தையும் ஒரு
அணுத்திரட்சி ...

பொருட்களின் ஆழத்துக்கு செல்லும்போது
பொருள் இல்லாது போய் விடுகிறது ...

எண்ணங்களின் ஆழத்துக்கு செல்லும்போது
அகந்தை மறைந்து விடுகிறது ...

ஓஷோ ...
தாவோ மூன்று
நிதியங்கள் 2 ...

Comments