Google

ஆனந்தத்தை ஈர்த்துக் கொள் - OSHO



ஆனந்தத்தை ஈர்த்துக் கொள்
நீ என்ன செய்தாலும் அது ஆனந்தத்தை உனக்குத் தருமா என்பதில் தெளிவோடு இரு. அது ஆனந்தத்தை கொண்டு வராது என்றால் அதை விட்டுவிடு, அதை செய்யாதே. அது உனக்கு துன்பத்தை தரும் என்பதை உன்னால் பார்க்க முடிந்தால் அதை மறந்து விடு. நேரத்தை வீணடிக்காதே. கடந்த காலத்தில் அதன் மூலம் நீ துன்பப்பட்டாய் என்பது உனக்கு தெரிந்தால், என்றாவது ஒருநாள் அது சந்தோஷத்தை கொண்டுவரும் என்று நம்பிக்கை கொள்ளாதே. அது கொண்டு வராது.
ஒரு சிறிதளவு சந்தோஷத்தை அது கொடுத்தால் கூட அதை அறிகுறியாக எடுத்துக் கொள். அதனுள் ஆழமாக செல், அதை மறுபடி மறுபடி செய், அதை மேலும் மேலும் அதிகமான அளவில் செய், அதன் ஓட்டத்துடன் செல். எந்த வாய்ப்பையும் தவற விடாதே. ஒவ்வொருவருக்கும் சிறிய அளவிலான சந்தோஷம் நிகழும், அதை கொண்டாடு. பின் அது மேலும் மேலும் அதிக அளவில் நிகழ ஆரம்பிக்கும். நீ உன்னுள் சந்தோஷத்தை ஈர்க்கக்கூடிய மின்காந்த சக்தியை உருவாக்கிக் கொள். நீ ஒரு நேர்மறை சக்தி கொண்ட காந்தமாக மாறு
--- ஓஷோ ---

Comments