Google

நாற்பது வயதுக்குப் பிறகு வானமே எல்லை (குறுக்கும் நெடுக்கும்) - OSHO



நாற்பது வயதுக்குப் பிறகு வானமே எல்லை (குறுக்கும் நெடுக்கும்)    ஓஷோ            

                   எல்லா தேசங்களையும் பொறுத்தவரையிலும் இதுதான் உண்மை. உதாரணமாக, இந்தியா போன்ற ஒரு தேசத்திற்கு எதிர்காலம் பற்றிய நினைப்பே இல்லை. அதாவது அதற்கு கிழடு தட்டிவிட்டது. அந்த நாடு எப்போதுமே இறந்த காலத்தைப் பற்றியே சிந்திப்பது அதன் அறிகுறிதான். நூற்றாண்டுகளாக ராமர்-சீதையின் வாழ்க்கையை நடித்துக் கொண்டிருப்பதே அதன் வழக்கமாகி விட்டது. எல்லாக் கிராமங்களும் இதன் நாடகத்தை நடத்துகின்றன.

               புத்தர், மகாவீரர், ஆதிநாதர், ரிக்வேதம், உபநிஷதங்கள் என்றே இந்தியா எண்ணிக் கொண்டிருக்கிறது. எல்லாமே முடிந்த  கதை. இப்போது அந்த தேசம் சாவுக்காகக் காத்திருக்கிறது. அதற்கு எதிர்காலம் இல்லை.

               இந்திய சிந்தனையின்படி -- இது கிழடு தட்டிய மனோபாவம் -- கிழட்டு மனிதனின் மனநிலை -- லட்சக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய யுகம்தான் மிகச் சிறந்த யுகம். அது சத் யுகம்; அதுதான் சத்தியத்தின் யுகம். அதையடுத்து மனிதனுக்கு வீழ்ச்சி தொடங்கியது. மனோதத்துவ அடிப்படையிலான ஒரு ஒற்றுமையை நீங்கள் பார்க்க முடியும். குழந்தைப் பருவம், இளமை, நடுத்தர வயது, முதுமை என நான்கு பருவங்கள். இதைப் போலவே வாழ்க்கையையும் நான்கு கட்டங்களாகப் பகுத்துக் காட்டியிருக்கிறான் மனிதன். முதற்கட்டம், குழந்தையைப் போன்று அப்பாவித்தனமானது. சலனமில்லாத நிலை அது. நான்கு கால்களைக் கொண்ட மேஜை போன்ற தடுமாற்றத்தை சீரான நிலை என்று உதாரணம் கொடுக்கிறார்கள். பிறகு வீழ்ச்சியின் ஆரம்பம்.

                இந்தியாவில் பரிணாம வளர்ச்சி என்ற சிந்தனை இருந்ததே கிடையாது. இதற்கு நேர்மாறான சிந்தனை உண்டு. மேற்கே இந்த வார்த்தை பழக்கத்தில் கூட இல்லை. இந்த வார்த்தையை நீங்கள் கேட்காமல்கூட  இருந்திருக்கிலாம். இந்தியாவின் சிந்தனையெல்லாம் தனக்குத்தானே விலங்கு மாட்டிக்கொண்டு முடங்கிப்போவது தான். பரிணாம வளர்ச்சி பற்றியது அல்ல.

                நாம் சுருங்கிக் கொண்டிருக்கிறோம். வீழ்ச்சியடைந்து வருகிறோம். இரண்டாவது கட்ட வீழ்ச்சியின்போது மேஜையின் ஒரு கால் முறிந்து விட்டது. மூன்று கால்களுடன் அது இன்னமும் தடுமாறாமல் நிற்கிறது. ஆனாலும், நான்கு கால்களுடன் இருந்த அதே ஸ்திரத் தன்மை இல்லை. மூன்றாவது கட்டத்தின் மேலும் ஒரு கால் பறிபோனது. அந்த மேஜை இரண்டு கால்களுடன் ஆட்டம் காண்கிறது. ஸ்திரத் தன்மையை முற்றிலும் இழந்து.  இப்போது நான்காவது கட்டம். இரண்டு கால்கள் கூட இல்லை.  நீங்கள் நின்று கொண்டிருப்பது ஒற்றைக் காலில்!  எவ்வளவு நேரம் இப்படி நிற்க முடியும்?

                  முதற்கட்டம் சத்யுகம் என்று அழைக்கப்படுகிறது. அது சத்தியத்தின் யுகம். இரண்டாவது கட்டத்தை திரேதா யுகம் -- மூன்று என எண் பெயரில் குறிப்பிட்டார்கள். காரணம், எஞ்சியவை மூன்று கால்கள்.  மூன்றாவது கட்டம் த்வாபர யுகம். மறுபடியும் எண்தான்: ' த்வா,' பல்வேறு மொழிகளில் மருவி 'ட்வா' என்றும், கடைசியில் 'டூ' என்றும் அனைத்து. நான்காவது யுகத்தை கலியுகம் என்கிறார்கள். இது இருந்த காலம். நாம் இருண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

               வயதான மனிதனின் மனநிலை இதுதான். இனிவரப்போவது இருளேதான். எதிர்காலத்தைப் பற்றி, ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றி குழந்தை சிந்திக்கிறது. வயது முதிர்ந்தவனோ பொன்னான இறந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறான். படுக்கைக் கோடு வாழ்க்கையில்தான் இப்படி நடைபெறும். செங்குத்துக் கோடு வாழ்க்கையில் கடந்த காலம் பொற்காலம்: நிகழ்காலமும் பொற்காலம்: எதிர்காலமும் பொற்காலமேதான். அது குதூகலம் பொங்கும் கொண்டாட்டமான வாழ்க்கை.

                எனவே, முதுமைபற்றிய விதிகள், சட்டதிட்டங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், உங்கள் ரயில் எந்த தண்டவாளத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பது பற்றிச் சிந்தியுங்கள். உங்கள் ரயில்களை மாற்றிக் கொள்ள இன்னமும் அவகாசம் இருக்கிறது. அதற்கு எப்போதுமே அவகாசம் இருக்கிறது. ஒவ்வொரு கணத்திலும் மாற்றம் நிகழ்கிறது. படுக்கைக் கோட்டிலிருந்து செங்குத்துக் கோட்டிற்கு நீங்களும் மாற முடியும். அது மட்டுமே மிக முக்கியம்.   ஓஷோ. (முற்றும்).

Comments

  1. மிகச் சிறப்பு , வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment