புத்தர் தனது தந்தையிடம் கூறுகிறார் !
புத்தர் தனது
தந்தையிடம் கூறுகிறார் !
நான் என்னுடைய எண்ணங்களைக்
கழித்து விட்டேன் ...
என்னுடைய விருப்பு வெறுப்புகளைக்
கழித்து விட்டேன் ...
நான் இப்போது ஒரு புத்தம்
புதியவன் ...
எனக்கு நான் யார் என்பது
தெரியும் ...
இப்போது எனக்குள் ஔி வெள்ளம்
புகந்து விட்டது ...
நான் என் உடல் அல்ல
என் மனம் அல்ல ...
என்பது எனக்கு தெரிந்து
விட்டது ...
இந்த உலகில் உன் ஜீவிதம் அற்புதத்
தனிமையில் இருக்கிறது ...
தியானம் , அருள் , ஞானம்
என்ற அசலான நிதியங்களை ...
சம்பாதித்துக் கொண்டவரையே
புத்தர் ஒரு ஞானி என்கிறார் ...
ஆனால் ஒரு அஞ்ஞானிக்கு எப்போதும்
தன் அகங்காரத்தைப் பற்றியே கவலை ...
அவன் உள்ளேயும் வெளியேயும்
குப்பைக் கூளங்களை திரட்டி வைத்துக்
கொள்கிறான் ...
ஒரு ஞானி
எதையும் தனதென்பதில்லை ...
அவர் பொருட்களை பயன்
படுத்துகிறார் ...
ஆனால் அவர் எதற்கும் சொந்தம்
கொண்டாடுவதில்லை ...
உன்னையே நீ உனக்கென்று
கொள்ளாத போது ...
வேறு எதை உன்னுடையது என்று
கொள்வது ...
Comments
Post a Comment