Google

அன்புள்ள ஓஷோ, இந்தியர்களுக்கு நீங்கள் குறிப்பாக வழங்க விரும்பும் அறிவுரை ஒன்று உள்ளதா?"



அன்புள்ள ஓஷோ, இந்தியர்களுக்கு நீங்கள் குறிப்பாக வழங்க விரும்பும் அறிவுரை ஒன்று உள்ளதா?"
இந்தியர்களுக்கு நான் கூறவிரும்புவது ஒன்றுதான்:உங்கள் உண்மையான முகத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் நாடு கௌதம புத்தர் பிறந்த நாடு. உங்கள் பிரதிநிதிகளால் உங்கள் நாட்டின் கதவுகள் தியானத்தை நோக்கி வரமுடியாமல் மூடி வைக்கப்படுகின்றன.
உங்கள் நாடு கிருஷ்ணர் வாழ்ந்த நாடு;பதஞ்சலி வாழ்ந்த நாடு.உங்கள் நாடு உலகில் வேறு எங்கும் காணமுடியாத பெரிய நட்சத்திரங்கள் பிரகாசித்த நாடு.
சிறுமை-மனப்பான்மையுடைய அரசியல்வாதிகள் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் சுரண்டி வறியவர்களாக்கிவிடும் முன் விழித்துக் கொள்ளுங்கள்.
கண்பார்வை நன்றாக உள்ள மக்களை குருடர்கள் வழிநடத்த அனுமதிக்காதீர்கள்.
மீண்டும் பண்டைய நறுமணங்களை நினைபடுத்திக்கொள்ளுங்கள்.உங்கள் உபநிடதங்களை,கபீரின் பாடல்களை,மீராவின் நடனங்களை ஈடு இணையில்லாத உங்கள் தொன்மை வளத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
உங்களை சிறிய மனிதர்கள் ஆளுகிறார்கள். அவர்களை உங்கள் மார்பின் மேலிருந்து உதறித் தள்ளுங்கள்.
உங்கள் நாட்டில் இன்னும் அறிவுள்ளவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் தேர்வுகளில் நின்ற உங்களிடம் வந்து "ஓட்டு" கேட்க மாட்டார்கள்.நீங்கள் ஓட்டுப் போட ஏற்ற தகுதியுள்ளவர்களின் கால்களில் விழுந்து வணங்குங்கள்.
அவர்களை தேர்தலில் போட்டியிட நிற்க வையுங்கள்."நாங்கள் எங்கள் ஓட்டை உங்களுக்கு போட விரும்புகிறோம்"என்று அழைத்து வாருங்கள்.
உங்களைத் தேடி வந்து ஓட்டு கேட்போர் சிறிய மனிதர்கள். மதிப்பும்,ஆன்மபலமும்,பெருந்தன்மையும் உடையவர்கள் உங்களிடம் வந்து ஓட்டு கேட்க மாட்டார்கள்.நீங்கள் அவரிடம் சென்று முறையிட வேண்டும்.
இந்தியா உலகுக்குப் புதியதோர் குடியரசை உருவாக்கிக் காட்ட வேண்டும்.இத்தகைய குடியரசில் தலைவர்கள் மக்களிடம் வந்து ஓட்டுக்காக கெஞ்ச மாட்டார்கள்.
மக்கள் அறிவாளிகளிடம் சென்று,உணர்வுப் பூர்வமான நல்ல மனிதர்களிடம் சென்று, "உங்கள் அருமையான நேரத்தில் சிறிதளவை, உங்கள் அறிவில் ஒரு சிறிதளவை இந்த வறிய நாட்டிற்குக் கொடுத்து உதவுங்கள்.!" என்று கேட்பார்கள்.
--ஓஷோ--

Comments