நீங்கள் எல்லாம் இந்த உலகத்தை துறக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. - OSHO
“நீங்கள் எல்லாம் இந்த உலகத்தை துறக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. என்னுடைய முழு போதனையும் என்னவென்றால், இந்த உலகத்தை அனுபவியுங்கள் என்பது தான்” – ஓஷோ
புத்தா என்பதன் உண்மையான அர்த்தம் – விழிப்புணர்வு பெற்றவன்.
ஒருவன் வாழ்க்கையை துறந்து சென்றால், ஒரு பறவையை தன் இரண்டு இறக்கைகளில் ஒன்றை இழப்பதற்கு சமம் தான்.
அவன் வெளி உலகத்தை இழக்கிறான்.
வெறும் ஒரு இறக்கையை வைத்துக்கொண்டு ஒருவன் முழுமையான வாழ்க்கையை இந்த உலகத்தில் வாழ முடியாது.
நான் என் மக்களுக்கு போதிப்பது என்னவென்றால், உங்களுடைய இரண்டு இறக்கைகளையும் (அகமும், புறமும்) ஆரோக்கியமாக இருக்கட்டும்.
அவைகள் ஒன்றுக்கொன்று எதிரி அல்ல. ஒன்றை சார்ந்து ஒன்று நிற்பவை. நீங்கள் ஒரு இறக்கையை வைத்துக்கொண்டு ஆகாயத்தில் பறக்க முடியாது. உங்களுக்கு வெளித் தன்மை, மற்றும் உள் தன்மை அதாவது பொருள் வளம் மற்றும் ஆன்மிகம் இரெண்டும் தேவை.
நறுமணம் மிக்க மலர்களையும், வானவில்லையும், மலையின் நாட்டியத்தையும், நதியின் ஓசையையும் மற்றும், கடல்கள் எல்லாவற்றையும் நேசிக்கிறேன், மற்றும் அனுபவிக்கிறேன்.
என்னுடைய பொக்கிஷம் என்றால் என்ன....???
அதன் பேரின்ப அனுபவம் என்றால் என்னவென்று தெரியும்.
நான் அவைகளுக்கு எந்த வேறுபாட்டையும் காணவில்லை.
ஆகவே நீங்கள் எதையும் துறக்க வேண்டாம். எதையும் மாற்ற முயலவும் வேண்டாம்.
ஓஷோ
பரவெளியின் பரவசங்களும் பாடல்களும்
Comments
Post a Comment