மக்கள் புத்தரிடம் சென்று ... - OSHO
மக்கள் புத்தரிடம்
சென்று ...
" நாங்கள் கோபப்படாமல் இருப்பதற்கு
என்ன செய்ய வேண்டும் " ?
அல்லது ...
" நாங்கள் பேராசைப் படாமல் இருப்பதற்கு
என்ன செய்ய வேண்டும் " ?
அல்லது ...
" நாங்கள் சாப்பாடு மற்றும் பாலுணர்வு
ஆகியவற்றில் அதீத ஆசையுடன் ...
இல்லாமல் இருப்பதற்கு என்ன
செய்ய வேண்டும் " ?
என்று கேட்பதுண்டு ...
அதற்கு புத்தரின் பதில் எப்போதும்
ஒரே பதிலாகவே இருந்தது ...
' விழிப்புடன் இருங்கள்
உங்களது வாழ்க்கையில் ...
விழிப்புணர்வைக்
கொண்டு வாருங்கள் '
என்பதுதான் அது ...
புத்தரின் சீடரான ஆனந்தா
இதையெல்லாம் கேட்டுக் கொண்டே
இருந்தார் ...
புத்தரிடம்
அவர் கூறினார் ...
மக்கள் எல்லோரும் வித
விதமான பிரச்சினைகளோடு வருகிறார்கள் ...
ஆனால் இதற்கெல்லாம் நீங்கள்
கொடுக்கும் மருந்து சீட்டு ...
ஒன்றாகத் தானே இருக்கிறது
என்று கேட்டார் ...
அதற்கு புத்தர் அவரிடம் ,
அவர்களது நோய்கள் வேறுபட்டவை ...
மக்கள் எப்படி வேறு வேறு கனவுகளைக்
காண்கிறார்களோ ...
அதைப்போல நோய்களும்
வேறுபட்டவை என்றார் ...
நீங்கள் என்னிடம் வந்து
இந்தக் கனவுகளில் ...
இருந்து விடுபடுவது எப்படி
என்று கேட்டால் ...
நான் கொடுக்கும் மருந்து சீட்டு
ஒன்றாகத்தான் இருக்கும் ....
' விழித்தெழுங்கள் '
என்பதுதான் அது ...
இது ஆளுக்கு ஆள் வித்தியாசப்
படாது ...
இதை நீங்கள் விழிப்புணர்வு
என்று அழைக்கலாம் ...
நீங்கள் இதை சாட்சி பாவனை
என்று அழைக்கலாம் ...
இதை நீங்கள் நினைவில் வைத்தல்
என்று அழைக்கலாம் ...
நீங்கள் இதை தியானம் என்று
அழைக்கலாம் ...
இவையெல்லாம் ஒரே மருந்திற்கான
வேறு வேறு பெயர்கள் ....
ஓஷோ ...
விழிப்புணர்வு தொடரும் ....
Comments
Post a Comment