நித்தியமான நெறியைத் தெரிந்து கொள்வதே ஞானம் ..- OSHO
நித்தியமான நெறியைத் தெரிந்து
கொள்வதே ஞானம் ..
பிறப்பிலிருந்து வந்த நீ
இறப்பிடம்
போய்ச் சேர வேண்டி இருக்கிறது ..
இந்த ஏதுமற்ற இரண்டுக்கும்
இடையே ஒரு கணம்தான் வாழ்க்கை ..
இறப்பு சேருமிடம் என்றால்
வாழ்க்கை முழுக்க ..
அதற்கான பயிற்சியாகிறது ..
எப்படி சரியாக இறப்பது ..
எப்படி முழுக்க இறப்பது ..
எப்படி முழுமையாக இறப்பது ..
இறப்பு உன்னுடைய அகத்தின்
நடுமம் ..
ஒருநாள் இறப்பு உச்சத்தை அடைந்து
அது மலர்கிறது ..
அந்த நாள்தான் உன் தோற்றுவாய்க்குள்
நீ போய் மறையும் நாள் ..
இறப்பு வாழ்வின் எதிரியல்ல
அது உன் வாழ்வின் ..
ஒரு பகுதிதான் என்பதை புரிந்து
கொள்வதே ஞானம் ..
ஓஷோ
தாவோ
மூன்று நிதியங்கள்
பாகம் 2
Comments
Post a Comment