நான் உனக்குச் சொல்கிறேன். - OSHO
நான் உனக்குச் சொல்கிறேன்.
வாழ்வு மட்டுமே ஒரே உண்மை.
வாழ்வை தவிர வேறு கடவுள் இல்லை.
எனவே வாழ்வை அதன் எல்லா வடிவங்களோடும் நிறங்களோடும் பரிமாணங்களோடும் முழு வானவில்லும் இசையின் எல்லா ஸ்வரங்களும் உன்னை ஆட்கொள்ள அனுமதி.
நீ இந்த எளிமையான விஷயத்தை சமாளிக்க முடிந்தால் – இது எளிமையான விஷயம். ஏனெனில் இது பிடிப்புகளை விடுதல் பற்றிய கேள்வி மட்டுமே. ஆற்றை தள்ளாதே. ஆறே உன்னை கடலிடம் கொண்டு சேர்க்கட்டும். அது ஏற்கனவே அங்குதான் செல்கிறது. நீ தளர்வாய் இரு இறுக்கமாக இருக்காதே.
ஆன்மீக வாதியாக இருக்க முயற்சி செய்யாதே.
பொருளுக்கும் ஆன்மாவிற்க்கும் இடையே எந்த பிளவையும் ஏற்படுத்தாதே.
பிரபஞ்சம் ஒன்றே. பொருளுலகமும் ஆன்மாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அவ்வளவே.
தளர்வாய் இரு ஓய்வாய் இரு ஆற்றோட்டத்துடன் செல்.
குடிகாரனாய் வாழ்வை குடிப்பவனாய் பிரபஞ்ச மதுவை பருகுபவனாய்
இரு.நினைவுகளில் மூழ்காதே. நினைவுகளில் மூழ்கியவன் இறந்தவனாகவே இருக்கிறான்.
வாழ்வின் மதுவை பருகு
அது மிகுந்த கவிநயம் கொண்டது
அது மிகுந்த அன்புடையது
அது மிகுந்த சாறு கொண்டது
.எந்த நொடியில் வேண்டுமானாலும் நீ வசந்தத்தை கொண்டு வரலாம்.
வசந்தத்திற்க்கு அழைப்பு அனுப்பு.
சூரியனும் காற்றும் மழையும் உன்னுள்ளே நுழையட்டும்.
வாழ்வே ஒரு கொண்டாட்டம் ஆகட்டும்.
ஓசோ
Comments
Post a Comment