ஓஷோவின் சிரிப்புத் துணுக்கு
ஓஷோவின் சிரிப்புத் துணுக்கு
கிழட்டு டெட் சில மணிநேரங்களாக ஆற்றின் மூலையில், ஒரு மீனும் கிடைக்காமல் அமர்ந்திருந்தார்.
பல பாட்டில் பீர்களும், அதோடு வேகும் சூரியனும் அவரைத் தலைசுற்ற வைத்தன, அப்போது ஒரு பெரிய மீன் தானே அவர் வலையில் வந்து, சிக்கிகொண்டது.
அது அவரை எழுப்பிய பொழுது அவர் சுத்தமாக அதற்கு தயராக இல்லை. அவர் முழுவதும் நிலைத் தடுமாறி போனார், மேலும், அவர் சமாளித்து எழுவதற்குள், அவர் ஆற்றில் விழுந்துவிட்டார்.
இந்த நிகழ்வுகளை ஆர்வத்தோடு ஒரு சிறுவன் பார்த்துகொண்டிருந்தான். அந்த கிழட்டு டெட் நீரிலிருந்து வெளியே வர போராடிய பொழுது,
அவன் அவனுடைய தந்தையிடம் திரும்பி பார்த்துக் கேட்டான் “தந்தையே, அந்த ஆள் மீனைப் பிடிக்கிறாரா? அல்லது அந்த மீன் அந்த ஆளை பிடிக்கிறதா?”
மனிதன் முழுவதுமாக தலைகீழாக ஆகிவிட்டான். அந்த மீன் உன்னை பிடித்துகொண்டிருக்கிறது அதோடு உன்னை இழுக்கிறது. நீ மீனை பிடிக்கவில்லை.
எங்கெல்லாம் நீ பணத்தை பார்க்கிறாயோ, நீ அப்பொழுது நீயாக இல்லை. உடனே நீ அனைத்தையும் மறந்துவிடுகிறாய் –
உன் வாழ்வின் உள்ளார்ந்த மதிப்புகளை உன்னுடைய மகிழ்ச்சியை, உன்னுடைய ஆனந்தத்தை, உன்னுடைய சந்தோஷத்தை நீ மறந்துவிடுகிறாய்.
Comments
Post a Comment