Google

விடுதலை அன்பின் சாரம்- ஓஷோ



விடுதலை அன்பின் சாரம்- ஓஷோ
ஆண் பெண் உறவை பற்றி பேசுவீர்களா?

ஆண் என்பவன் 'ஏகப்பட்ட பத்தினி விரதன்' என்றும் பெண் என்பவள் பதிவிரதை என்றும் பலர் நம்புகிறார்கள் .பெண் ஒருவனுடனே வாழவும் ,அவனையே நேசித்து அர்ப்பணம் ஆகிவிடுகிறாள் என்றும் நம்பிக்கை கொள்கிறார்கள்.ஆனால் ,ஆண் பிற பெண்களை காதலிக்கலாம் ,அது கூட எப்போதாவது.

நிஜம் எதுவெனில் இருவருமே ஒன்றில் திருப்தி கொள்ளாதவர்கள் (போலிகமஸ்) பெண் பல நூற்றாண்டுகளாக 'பதி விரதை ' என்ற கருத்தியலுக்கு சீர்திருத்தப்பட்டிருகிறாள் .ஆண் மிகவும் தந்திரசாலி .அவன் பெண்ணை பலவகைகளில் சுரண்டியிருகிறான் .இயல்பிலேயே ஆண் சபல புத்தியுடையவன் என்று போதனை செய்தது அதில் ஒரு வகை.எல்லா மன இயல் நிபுணர்களும்,சமூகவியலாளர்களும் ஆண் சபல புத்தியுடையவன் என்று ஒப்பு கொள்கிறார்கள்.ஆனால்,பெண்ணைப் பற்றி யாருமே பேசுவதில்லை.

எனக்கு புரிந்தவரை இருவருமே சபல புத்தியுடையவர்களே.பெண் சபல புத்தியின்றி இருந்தால் அது இயற்கையல்ல ,அது பயிற்றுவிக்கப்பட்ட ஒன்றே .அவள் மிகவும் சீரமைக்கப் பட்டிருக்கிறாள்.அது அவள் உதிரத்துடன் ஊறிவிட்டிருக்கிறது.அவள் எழும்போதும் சதையுடனும் கலந்து விட்டிருக்கிறது.நான் ஏன் இப்படி கூறுகிறேன் என்றால் இருத்தல் முழுவதிலும் எல்லா விலங்குகளும் சபல புத்தி கொண்டவைதாம்.

இருத்தல் முழுவதுமே அப்படியிருக்கையில் பெண் மட்டும் இயற்கைக்கு முரணாக இருப்பது ஆச்சிரியமானதுதான் .பெண் பொருளாதார ரீதியாக ஓர் ஆணையே நம்பவேண்டியுள்ளது.பெண்ணின் சிறகுகளை ஆண் கத்தரித்து விட்டான்.அவள் மீது பொறுப்புகளை சுமத்தி விட்டன.பெண்ணிடம் மிகவும் அன்புடன் அவன் கூறுகிறான் " உன்னைப் பற்றி கவலைப் படாதே .நான் உன்னைப் பார்த்து கொள்கிறேன்" ஆனால் ,அன்பின் பெயரால் அவன் அவள் சுதந்திரத்தை பறித்து விட்டான்.
,_OSHO

Comments