உங்கள் கண்களுக்குத் தெரியாத மனதின் சிறு சிறு ... - OSHO
உங்கள் கண்களுக்குத் தெரியாத
மனதின் சிறு சிறு ...
வேறுபாடுகளைக்
கவனியுங்கள் ...
அதன் திடீர் திருப்பங்களை
அழகான திருப்பங்களைக் கவனியுங்கள் ...
மனம் விளையாடுகிற
விளையாட்டுகளையும் அதன் ...
கற்பனைகளையும் ,
கனவுகளையும் , நினைவுகளையும் ...
தனியாக நின்று கொண்டு
கவனியுங்கள் ...
அதில் ஈடுபடாமல் தொலைவில்
இருந்து கவனியுங்கள் ...
கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள்
உணர ஆரம்பிப்பீர்கள் ...
உங்களது கவனித்தல் ஆழமாக
ஆக ஆக உங்களது ...
விழிப்புணர்வும்
ஆழமாக விடும் ...
அதில் இடைவெளிகள் எழுவதற்கு
ஆரம்பித்து விடும் ...
அந்த இடைவெளிகளில் முதன்
முறையாக உங்களுக்கு ...
இந்த மனம் இல்லாத நிலையின்
காட்சி கிடைக்கும் ...
நீங்கள் அப்போது இந்த மனம் இல்லாத நிலையின் சுவையைப் பெறுவீர்கள் ...
ஓஷோ ...
விழிப்புணர்வு தொடரும் ...
Comments
Post a Comment