Google

ஒரு மனிதன் வருமான வரி அலுவலகத்திற்குள் பதட்டத்துடன் ஓடி வந்து கூறினான் - OSHO Jokes



சிரிக்கலாம் வாங்க. (ஓஷோ)

ஒரு மனிதன் வருமான வரி அலுவலகத்திற்குள் பதட்டத்துடன் ஓடி வந்து கூறினான் – ஐயா, நான் நிலைதடுமாறி இருக்கிறேன், என் மனைவியைக் காணவில்லை.
அதைக்கேட்ட அங்கிருந்த அலுவலர் கூறினார் – அப்படியா. அதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் இது வருமானவரி அலுவலகம், நீங்கள் செல்ல வேண்டியது காவல் நிலையம் என நினைக்கிறேன்.
அதைக்கேட்ட அவன் கூறினான் – தெரியும், தெரியும். சென்றமுறை அங்குதானே சொன்னேன், ஆனால் அவளை கண்டுபிடித்துவிட்டார்களே. அதனால்தான் இங்கு சொல்கிறேன்.
அப்படியானால் ஏன் வருமானவரி அலுவலகம் செல்கிறாய். ஏனெனில் உன் ஒரு பாகம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று சொல்கிறது, ஆமாம்-மனைவியைக் காணோம், கணவன் கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும். உன் மற்றோரு பாகமோ மகிழ்ச்சியோடு-அப்பா, அவள் தொலைந்தாள், எங்கேயாவது காவல் நிலையம் பக்கம் போய் சொல்லிவிடாதே என்கிறது.
இப்படித்தான் உனது வாழ்க்கை பாதி-பாதியாக எதிர் எதிராக போய்க்கொண்டிருக்கிறது – இதனால் நீ துண்டு துண்டாக்கப்படுகிறாய். ஒருபக்கம் மரியாதை மிகுந்த கணவன் ஏதாவது செய்ய வேண்டும், மறுபக்கம் சுதந்திரத்தைத் தேடும் மனிதன் வேறு ஒன்றைச் செய்ய வேண்டும். மனைவி போனதால் மகிழ்ச்சி, ஆனால் ஒரு கணவனாக சோகமாக நடிக்க வேண்டும். மற்றவர்கள் அவன் மகிழ்ச்சியைக் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் அவன் சோகமாக நடிக்கிறான். மகிழ்ச்சி சரியல்ல, அதைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் அவனது மரியாதையும் மதிப்பும் தூள்தூளாகிவிடும். ஆகவே அவன் ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் காவல் நிலையத்திற்குப் போகவும் முடியாது, எனவே வேறு எங்கோ போகிறான்.
உனது வாழ்வை கவனி. உனது வாழ்வை இதுபோன்ற விதங்களில் வீணாக்காதே.
ஓஷோ                        

Comments