தனித்திருத்தல் தனிவிடப்படல் Alone and Lonely,, - OSHO
தனித்திருத்தல்
தனிவிடப்படல்
Alone and Lonely,,
ஓஷோவின் தெளிவு,,
உலகிலேயே மிகப் பெரிய அற்புதம்
உலகிலேயே மிகப் பெரிய அற்புதம் என்ன என்று ஒரு ஜென் மாஸ்டரிடம் கேட்டார்கள்
அதற்கு அவர்
" நான் இங்கு என்னுடன் தனித்து அமர்ந்தவாறு இருக்கிறேன் "
என்பதுதான் என்று பதிலளித்தார்
இந்த உலகில் யாருமே தனித்திருக்க விருமபுவதில்லை
தனித்திருத்தலே மிகப் பெரிய அற்புதம்
தனித்திருத்தலில் நீங்கள் அப்படியே உங்களுடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள்
தனித்திருத்தல் (alone)
தனிவிடப்படல் (lonely)
இரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு
தனிவிடப்படலில் நீங்கள் மற்றவருக்காக ஏங்குகிறீர்கள்
உங்களுடன் உங்கள் மனைவியோ கணவரோ நண்பரோ அப்பாவோ அம்மாவோ யாராவது கூடவே இருந்தால் நல்லது என்று ஏங்குகிறீர்கள்
மற்றவர் உங்களுடன் இருந்தால் ஒன்றாக இருக்கும் நன்றாக இருக்கும்
ஆனால் மற்றவர் உங்களுடன் இல்லை
மற்றவர் இல்லாத நிலைதான் தனிவிடப்பட்ட நிலை
ஆனால் தனித்திருத்தல் உங்கள் பிரசன்னமாகும்
இந்த அகண்டம் முழவதையுமே நிரப்பி விடுமளவுக்கு நீங்கள் உங்கள் பிரசன்னத்தால் நிரப்பப் பட்டுள்ளீர்கள்
இதில் மற்றவர் யாரும் துணையிருக்கத் தேவையில்லை
இதை உணர முயற்சி செய்யுங்கள்
சிலபோதேனும் சற்றே தனித்திருந்து பாருங்கள்
வெறுமனே உட்கார்நதிருங்கள்
சும்மா இருத்தல் தனித்திருத்தல்
தனித்து உட்கார்ந்து இருங்கள் இதுவே தியானம் எனப்படும்
ஓஷோ,,,
Comments
Post a Comment